பக்கம்:நாடும் நாடகமும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சந்தனக் கிண்ணம் "கண்ணே கமலா! நீ அதிர்ஷ்ட சாலி ! இதைப் பெற்றுக்கொள். நம் அன்பின் அடையாளமாக. எந்த நெருக்கடி வந்தாலும் சரி, இந்த அன்புச் சின்னத்தை மறந்து விடாதே: சந்தனக் கிண்ணம்; உன் உள்ளம் சந்தோஷக் கிண்ணமாயிருப்பதை விளக்கும் சின்னம் " என்று கூறிக்கொண்டே கமலாவைத்தழுவிக் கொண் டாள். ஆனந்தக் கண்ணீர் பொழிந்தாள். கமலாவும்கண் கலங்கிவிட்டாள் சந்தோஷத்தால், வாழ்வின் ஆரம்ப விழா அரும்பி விட்டது. குடும்பம் குதூகலமாய் துவங்கியது. கமலா கொஞ்சம் பழமைப்பித்து பிடித்தவள். காதலர் களுக்குள் ஊடல் ஏற்படுவதெல்லாம் பழமை புதுமைச் சண்டையினாலேயே என்ற நிலைமை சிலநாள் தொடர்ந் தது. பிறகு இருவருமே கடவுளர்களைக் கேலிசெய்ய ஆரம்பித்தனர். "பரமசிவனையும் பார்வதியையும் தினம் தினம் பள்ளியறைக்குப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு போகிறார் களே பக்தர்கள்.... ஆனால் அவர்களுக்குக் கணபதி, முருகன் இருவரைத் தவிர வேறுகுழந்தைகள் பிறக் கவே இல்லையே ! ஏன் ? " என்பான் கந்தன். தெரியாதா உங்களுக்கு ? அவர்கள் கர்ப்பத்தடை செய்துகொண்டார்கள்" என்று சிரிப்பாள் கமலா.