பக்கம்:நாடும் நாடகமும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 11 "கடலிலே மீனை வெள்ளைக்காரனும் பார்த்தான் நாமும் பார்த்தோம்" என்று ஆரம்பிப்பான் கந்தன்.

59 "வெள்ளைக்காரன் மீனைப்,பார்த்து சப்மரீன் செய் தான்; நாம் மச்சாவதாரம் செய்தோம் என்று முடிப் பாள் கமலா. இப்படி வளர்ந்தது அவர்களின் இன்ப வாழ்வு. இந்தப் புதியஜோடி கண்டு கந்தனின் தாய் களிப்படைந் தாள்என்றாலும், கமலாவும் இப்படியெல்லாம் கடவுளைத் திட்டுகிறாளே; அடுப்பங்கரையில் கிடக்க வேண்டியது. களுக்கு இந்த வம்புகள் எல்லாம் ஏன் என்ற ஆத்திரம் மெல்லத் தலைநீட்ட ஆரம்பித்தது. வெளிப்படையாகக் கண்டித்தால் மகனுக்குவருத்தம் வருமேயென்று ஜாடை மாடையாகக் கண்டிக்கத் தொடங்கினாள். அப்படிக் கண்டனங்கள் கிளம்பும்போது காதலனின் இன் முகத்தை நினைத்து கமலா ஆறுதல் பெறுவாள். அது, மட்டுமல்ல; அவள் தோழி விஜயா அடிக்கடி சொல்லி யிருக்கிறாள். "வீட்டிலேயிருக்கிற பெரியவர்களின் மனதை நோகவிடும்படி நடக்காதே. அனுசரித்து நட என்ற பொன்மொழிகளை, அதை நினைத்துக் கொள்வாள் கமலா. உடனே ஓடிப்போய் அவள்கொடுத்த அன்புப் பரிசை - அந்த சந்தனக்கிண்ணத்தை எடுத்து முகத்திலே அணைத்துக்கொள்வாள். சந்தனக்கிண்ணத்தின் விளிம்பு களிலே அவள் தன் ஆரூயிர்த் தோழியின் உயிர்த்துடிப் புள்ள இதழைக் காணுவாள்; அந்தக்கிண்ணத்தின் பள பளப்பிலே தோழியின் சிரிப்பைக்கண்டு துள்ளியெழு வாள். காதலன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவளுக்குப் பேச்சுத்துணை சந்தனக் கிண்ணந்தான். மாமியாருக்கு, 91-