பக்கம்:நாடும் நாடகமும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 13 அந்தச் சந்தனக்கிண்ணமிருக்கிறது. சந்தனக் கிண்ணத் தோடு பேசி முடித்தாகிவிட்டது; இப்போது அவள்எதிர் பார்ப்பது அலுவலகத்திலிருந்து திரும்பும் கந்தனை. கண்களும் வலிக்கத் துவங்கிவிட்டன: கந்தனைக் காணோம், ஒரு பெருமூச்சோடு பலகணியைவிட்டு அகல முயன்றாள். அமைதியாயிருந்த தெருவிலே ஒரு அலை முழக்கம் புறப்பட்டது. பரபரப்போடு கமலா பலகணி! வழியை பார்வையைச் செலுத்தினாள். " தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! தாலமுத்து நடராசன் புகழ் வாழ்க! என்று பரணி பாடியபடி ஒரு தமிழர் பட்டாளம் பவனி வந்துகொண்டிருந்தது. ஒளவைக் கிழவிபோன்ற ஒருமூதாட்டி கம்பீர நடைபோட்டு, கையிலே கொடி ஏந்தி, பிறைபோல வளைந்த கூனல் எப்படி நிமிர்ந்தது எனப்பார்ப்போர் ஆச்சரியப்படும்படி அந்த அணிவகுப்புக்குத் தலைமை வகித்துச் சென்றாள். நீண்டு உயர்ந்த-சேரன் செங்குட்டுவனே வந்துவிட்டான் என அதிசயிக்கத்தக்க அளவுக்கு வாட்ட சாட்டமான ஒருமனிதர் - அஞ்சாநெஞ்சர்-படையின் தளபதியாக வீர நடை போட்டார். அந்தப் புலிநிகர் மாந்தர்களின் ஒலி முழக்கம் கமலாவை வீறு கொள்ளச் செய்தது. திருமணத்தன்று "காதலிலே கவிதையிலே களம் போகும் பேச்சு. கணவனுக்கும் மனைவிக்கும்திராவிடமே மூச்சு என்று தலைவர் சொன்ன கவிதை நினைவுக்கு வந்தது. நினைவு அலைகளிலே சுழன்று கொண்டிருந்த அந்த ஏந்திழையை ஒருகுரல் திடுக்கிட வைத்தது. "தமிழ் வாழ்க! " தென்றல் நடையிலே ! " இந்தி ஒழிக புயல் நடையிலே ! இரண்டு நடையிலும் கிளம்பிய ஒலி கந்தனுடையதுதான், கமலா வெளியே ஓடி வந்தாள்.