மு. கருணாநிதி 23 வேடன் மரத்தில் ஏறிவிட்டான். கரும்புறாவும், கலரிப்புறாவும் தங்கள் மூக்குகளில் குச்சிகளைப்பிடித்துக் கொண்டு வேடனை எதிர்க்கத்தயாராயின. அந்தச் சமயத் தில் வெண்புறா, பின்புறமாகச் சென்று வேடனின் காலில் பலமாகக் குத்தியது அலகுகளால், அதைச்சேர்ந்த புறாக்களும் வேடனில் காலைக்குத்தி ரத்தம் வழியச் செய்தன. வலி தாங்கமுடியாமல் வேடன் மரத்திலிருந்து கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு மாண்டான். வேடன் வீழ்ந்ததும் கரும்புறாவும் கலர்ப்புறாவும் வெற்றிச் சிரிப்பு சிரித்தன. வெண்புறா தன் கடமையை செய்து முடித்துவிட்டதாகக் களிப்படைந்தது. மறுநாள் காலையில் பத்து புறாக்களை வல்லூறு அடித்துக் கொன்று குவித்தது. அது மட்டுமல்ல; வல்லூறு அந்த ஆலமரத்தில் 'இது வல்லூறின் மரம் என்றும் எழுதிவைத்தது. 39 அந்த எழுத்தை அழிக்க வேண்டுமென்று கரும் புறாவும் வெண்புறாவும் புறப்பட்டன. கரும்புறா, கலர்ப் புறாவைக் கூப்பிட்டுப் பார்த்தது. கலர்ப்புறா, ஏதோ, சாக்குப் போக்குச் சொல்லி, அதில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்தது. ஆலமரத்திலிருந்து வல்லூறை விரட்டும் பணியிலே வெண்புறா தீவிரமாக - ஈடுபட்டது. கரும்புறாவும் அந் த முயற்சியில் இறங்கியது. அதற்கு கலர்ட்புறாவைக் கூப்பிட்டது, வல்லூறு கொடிய பறவைதான், ஆனாலும் அதையும் இணைத்துக்கொண்டு எல்லோரும் ஆலமரத்தில் இஷ்- பூர்வமான குடும்பம் நடத்தலாம்" என்று கலர்ப்
பக்கம்:நாடும் நாடகமும்.pdf/23
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை