பக்கம்:நாடும் நாடகமும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஆதரிக்கிறார் மக்கள் குமுறும் எரிமலைகளாகி விட்டனர். அப்போது, புண்யகோடி புதிய தலைவரைப்பற்றி ஒரு மேடையில் பேசப்போவதாக விளம்பரம் செய்தார். மக்கள் திரண்டு வந்தனர். முதலில் புண்யகோடியின் காரியதரிசி பேசினார். புதிய தலைவரைக் காரசாரமாகத் தாக்கினார். மக்கள் குதூகலித்தனர். அடுத்துப் புண்யகோடி எழுந் தார். பொதுமக்கள் ஆவல் ததும்பியபடி அவர் பேச்சை எதிர்நோக்கினர். புண்யகோடி பேசினார். 66 நண்பர்களே ! நான் புதிய தலைவரை ஆதரிக்கிறேன்" என்று கூறிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினார். பொதுமக்கள் வாயடைத்துப் போயினர். காரியதரிசி கர்ச்சிக்கிறார். புண்யகோடி இப்படி பேசுகிறார். என்ன ஆச்சரியம் ! என்று நகரமேவியந்தது. " நீ தாக்கு " " "நான் ஆதரிக்கிறேன்" என்று திட்டம் போட் டிருக்கிறார்கள் என்றனர் சிலர் "புதிய தலைவருக்கும் புண்யகோடிக்கும் ஏதோ பேச்சு நடந்திருக்கிறது' என்றனர் சிலர். "எல்லாம் நன்மைக்குத்தான் என்றனர், புண்ய கோடியின் பரம்பரைப் பக்தர்கள். பாவம் அவர்களுக்கெல்லாம் தெரியாது - புண்ய கோடி, மீண்டும் அனுப்பிய பழைய விண்ணப்பத்தை புதிய சேர்மன் கவனித்துப் பத்தாயிர ரூபாயை வீடு பழுது பார்க்கத் தந்துவிட்டார் என்ற சேதியும்- புண்ய கோடியிடம் பழைய நகரசபை நஷ்ட ஈடாகப் பெற்ற பத்தாயிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார் என்ற தகவலும். எல்லாம் எப்படியோ மறைக்கப்பட்டு விட் டன. புண்யகோடி பொதுஜனத் தொடர்போடுதான் உலவு கிருராம் இதைமட்டும் அவர் காரியதரிசி சொல்கிறார்.