மு. கருணாநிதி 35 யும் கவர்ந்துவிடுகிறான், துணிக் கடைக்காரனும், வளையல், ரிப்பன் கடைக்காரனும்! அவர்கள் பொருக் 66 கும் டிசைனில்" தான் வித்தியாசமே தவிர அவர்கள் வாங்குவது என்னவோ கண்ணாடி வளையல்களும், இமிட்டேஷன் நகைகளும் தான்!
ஆம்! பெண்கள் இமிட்டேஷனில் உள்ளத்தைப் பறிகொடுத்து விடுகிறார்கள். இதைப்போலத்தான் விமலாவும் அண்ணாமலையிடம் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தாள், அவன் ஒரு 'இமிட்டேஷன்' டால்' அடிக்கும் பட்டை தீட்டப்பட்ட கண்ணாடி என்பதை அறியாமல் ! பெண்களைப் போலத்தான் சில ஆண்களும்! அவளுடைய அழகையும் " மேக்-அப்'பையும் அளக் கிறார்களேயன்றி, உள்ளத்தை - அவளுடைய பண்பை அளப்பதில்லை! சிலர் காதல் செய்யப் பழகிக்கொள்கிறார் கள்; பழக்குகிறார்கள். ஆனால், இதற்கு எத்தனை பேர் பலியாகிறார்கள் தெரியுமா? பாவம்! விமலா அண்ணாமலைப் படுமடுவிலே வீழ்ந்துவிட்டாள். குளிர் நீரோடை என்றெண்ணி! அவள் மேலும் தப்பில்லை, அவள் என்ன செய்வாள்? அவள் ஒரு காம்பொடிக்கப்பட்ட குண்டு மல்லிகை ! மலர் செடியிலிருந்து பறிக்கப்பட்டதே யொழிய, மணத்திலிருந்துப் பறிக்கப்படவில்லை. இன்னும் வாசனை வீசிக்கொண்டேதான் இருக்கிறது. ஆம்..அவள் ஒரு இளம் விதவை. ஆனால் அவளுடைய பெற்றோர் கள் புத்திசாலிகள்: அஞ்சாத நெஞ்சர்கள் அதனால்தான் கல்லூரியிலே சேர்த்துவிட்டனர், விமலாவை!