பக்கம்:நாடும் நாடகமும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 37 விமலா மெள்ள மெள்ள அறிந்துகொண்டாள் அண்ணாமலையின் ரகசியத்தை. ரகசியத்தை. அவள் புலியானாள்‘ அவள் முன்னே கண்ணகியும், மாதவியும் வந்து வந்து போயினர். மணிமேகலை அமுதசுரபியுடன் காட்சிதந் தாள். நல்லதங்காள் தற்கொலைக்கு முயற்சிப்பதையும் பார்த்தாள். அவள் உடம்பு ஒருமுறை வியர்த்துப் பின் சில்லிட்டது. அவள் இருதயத்திலிருந்து இரத்தம் புது வேகத்துடன் பாய்ந்வது உடலிலெல்லாம். "அவன் அழகாயிருப்பதால் தானே அவன் வலையில் நான் வீழ்ந்தேன், தத்தளிக்கிறேன். அவன் அழகாயிருப் பதால் தானே அவன் பெண்களைக் கெடுக்கிறான். அவன் அழகைக் கெடுத்துவிட்டால்....?" என்னென்னமோ எண்ணிக்கொண்டே சென்றாள், விமலா கல்லூரிக்கு ! " கெமிஸ்ட்ரி பிராக்டிகல்" நடந்து கொண்டிருந் தது. பையன் ஒருவன் கண்ணாடிக் குவளையை உடைத் ததைப் பற்றி விசாரணை செய்துகொண்டிருந்தார் பேராசிரியர். விமலா முக்கி முணகிக்கொண்டே சோத னையைச் செய்துகொண்டிருந்தாள். என்ன வென்று கேட்டவர்களுக்கு வயிற்றுவலியைக் காரணமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்கல்லவா தெரியும் நடந்ததும் இனி நடக்கப் போவதும் ! அண்ணாமலை ஒரு மூலையில் சோதனை செய்து கொண்டிருந்தான். முன்பு போல இப்போது அவன் விமலாவைக் கவனிப்பதில்லை. விமலா மெதுவாகத் தன்னிடத்தைவிட்டு நகர்ந்தாள். அணையப் போகும் விளக்கு பிரகாசத்துடன் எரிவதில்லையா ? அதைப் போல அவள் முகத்திலே ஒரு ஒளி ; சிறு மகிழ்ச்சி காணப்