பக்கம்:நாடும் நாடகமும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரகசியம் ! அவன் கவிஞன், பொன்னும் மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்வான் தமிழ்த்தாய்க்கு ! தந்தத் தால் ஆன கட்டிலிலே சந்தணத் தொட்டிலிலே தமிழ்க் குழவியை சீராட்டிப் பாராட்டுவான். கண்ணே ! முத்தே தமிழ்ப்பண்ணே ! என்றெல்லாம் கவிதைக் காதலியோடு கொஞ்சுவான். அவன் புகழ்குன்றின் மேல் ஜோதியா யிற்று. எழுத்தின் வேந்தர் என்றனர் அவனை. கருத்தின் செல்வன் என கவி பாடினர் மக்கள். பழுத்த அனுபவம். கொழுத்த சொற்கள். இவை களை வைத்துக் கொண்டு அவன் தமிழுலகில் நிமிர்ந்து நின்றான். ஏடுகள்...அவன் எழுத்துக்கோர்வை இல்லாவிட் டால் இனிக்காது! நாடகம்....அவன் பாடல் ஒலிக்காவிட்டால் சோபிக் காது ! திரை உலகம்....அவன் கீதங்கள் முழங்காவிடில் சுவைக்காது ! இப்படி வளர்ந்தான் அவன். ஏழைகளை ஊக்குவிப்பான் ! கோழைகளை வீரராக் குவான்! "தாழையின் முள்ளும் வாழையின் குருத்தும் சேருமோ" எனக்கேட்டு " தமிழர் பண்பும் ஆசிரியர் கலையும் ஒட்டாது; கிழிந்துவிடும் என்ப தற்கு விளக்கம் தருவான். அவனைப் பாராட்டிப் பலர் எழுதினர்.