மு. கருணாநிதி 45 சேர் ஆரணங்கு ஒடிந்துவிழும் கொடியிடை, ஒய்யார நடனமாயிருந்தது. அவள் பாடினாள், பாடினாள், பாடிக் கொண்டேயிருந்தாள். அழகு சதிராடும் அவள் விரல்கள் வழியே விழியை எங்கேயோ தூது விடுத்தாள். தூது முடிவதற்குமுன் புலியொன்று பாய்ந்தது மேடையில், புலியைத் தொடர்ந்து அவள் எதிர்பார்த்த வீரனும் பாய்ந் தான். அந்தப் புதுமொழியாள் சிறிது கலங்கினாள். வீரன் பேச ஆரம்பித்தான். வீரன் : வஞ்சிக்கொடியே! அஞ்சாதே ! புலியை அடக் கினால் தானே இந்தப் புள்ளிமானை அணைக்க முடியும் என்னால் ! இதோ பார். வீரன் புலியின்மீது பாய்ந்தான். பயரங்கரமான போராட்டம் நடைபெற்றது. புலியின் நீண்ட கோர மான நகங்கள் அவன் இருதயத்தைப் பெயர்த்தெடுக்க முயற்சித்தன, புலியின் அகண்ட வாய்க்குள்ளே அவன் வணங்காமுடி அகப்பட்டுக்கொள்ளுமோ என்று அவள் துடித்தாள். புலியின் கால்களை வீரன் பிடித்துக்கொண் டான். நெற்கதிர்களைக் களத்தில் போட்டு கீழே அடிப்பதுபோல, வீரன் புலியை பலமுறை தரையில் அடித்தான். புலி தோல்லியுற்றது. அதைக் கையில் பிடித்து இழுத்துக்கொண்டு காதலியிடம் சென்றான். காதலன் கன்னத்திலே புலியின் பற்களால் ஏற்பட்ட ரத்தத்தையெல்லாம் அவள் தன் முத்தத்தால் துடைத் தாள். அப்போது காதலியின் தகப்பன் அங்கு ஓடி வந்தான், வயது சென்ற கிழவன். ஆனால் வாட்டமற்ற மேனி. அவன் கையிலே வில்லும் அம்புப் பெட்டியும் இருந்தது. அந்த அம்புப் பெட்டி மீன் வடிவத்திலே செய்யப்பட்டிருந்தது.
பக்கம்:நாடும் நாடகமும்.pdf/45
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை