இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மு. கருணாநிதி 47 (பாட்டு) "தோண்டினால் தங்க முண்டு-பகைவர் தீண்டினால் சீறும் சிங்கக் குணமுண்டு-அவர்கள் வேண்டினால் கருணையுண்டு - அந்தப் பாண்டிய நாட்டின் பெரும் மன்னவன் வந்தேனே... வந்தேனே .. வந்தேன தாண்டிட அஞ்சுவர்! - எதிரிப் பூண்டுகள் அழித்திடுவோம் எங்கள் எல்லைக் கோட்டை தாண்டிட அஞ்சுவரே ! சங்கம் வளர்த்தோம் சங்கம் வளர்த்தோம் - மதுரைச்=cati பங்கமிலாத பல காவியம் கொடுத்தோம் வங்கம் கலிங்கம் வணங்கிட மீன் கொடி பொறித்தோம் வளையாபதி, குண்டலகேசி நிலையா மெனும் சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணியுடனே - நாவலர் புகழ் மணிமேகலை தந்தோம் தமிழ் வளர்த்தோம் தக தரிகிட தக தமிழ் வழர்த்தோம். பாண்டிய பெருமன்னன் வந்தேனே பாண்டிய பெருமன்னன் வந்தேனே" பாண்டியன் அமருகிறான். அதைத் தொடர்ந்து சொக்குப் பச்சை பட்டுடை பூண்டு சோழமன்னன் கொண்டு வருகிறான். பாடிக்