பக்கம்:நாடும் நாடகமும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 7 கேற்றி எளிய நடையிலே கீதமிசைத்துத் தந்தார். அந்தக் கீதமே ஒரு கதையாக இருந்தது. குடிசைதான் ஒரு புறத்தில் கூரிய வேல், வாள் வரிசையாய் அமைந்திருக்கும், வையத்தைப் பிடிப்பதற்கும், வெம்பகை முடிப்பதற்கும், வடித்து வைத்த படைக்கலம்போல் மின்னும், மிளிரும். புலியின் குகையினிலே அழகில்லை : புதுமையல்ல. கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலை காட்டா: மானத்தின் உறைவிடம், மறவன் மாளிகை. இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோறோடு வெல்லத்தைச் சிறிது கலந்து வயிற்றுக்குள் வழியனுப்ப; பொக்கை வாய்தனைத் திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள் பெருநரைக் கிழவி யொருத்தி, ஓடிவந்தான் ஒரு வீரன் ஒருசேதி பாட்டி, என்றான் C ஆடி வந்த சிறுமிபோல் பெரு மூச்சு வாங்குகின்றாய் ஆண் மகனா நீ தம்பி ! நீ மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும்,- பின் பேச்சுக்குத் துவக்கம் செய் என்றாள் அந்தக் கிண்டலுக்குப் பேர்போன கிழட்டுத் தமிழச்சி. "வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி. உன் வாடிக்கைக் கேலியை விட்டுவிடு. மடிந்தான் உன் மகன் கலத்தில்" என்றான். மனம் ஒடிந்து நிமிரிந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை. "தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு களமும் அதுதான்; 1 காயம் மார்பிலா முதுகிலா ?" என்றாள் பதினை