பக்கம்:நாடும் நாடகமும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சந்தனக் கிண்ணம் 'முதுகில்' என்றான். கிழவி துடித்தனள், இதயம் வெடித்தனள், வாளை எடுத்தனள். 4640 முழவு ஒலித்த திக்கை நோக்கி முடுக்கினாள் வேகம். கோழைக்குப் பால் கொடுத்தேன்- குப்புற வீழ்ந்து கிடக்கும், மோழைக்குப் பெயர் போர்வீரனாம். முன்பொரு நாள் பாய்ந்துவந்த ஈட்டிக்கு பதில் சொல்ல மார்பைக் காட்டி சாய்ந்து கிடந்தார், என் சாகாத கண்ணாளர். அவருக்குப் பிறந்தானா! அடடா! மானமெங்கே ! குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்துபட்டான் இமைய வரம்பினிலே வீரம் சிரிக்கும் வீணை நரம்பினிலே இசை துடிக்கும், அதுவும் மானம் மானமென்றே முழங்கும். மதுவும் சுராவும் உண்டு வாழும் மானமற்ற ஆரியத்தின் வம்சமா நீ ? ஏடா? மறத் தமிழ் குடியிலே மாசு தூவி விட்டாய். தின்று கொழுத்தாய், திமிர் பாய்ந்த தோள்கள் எங்கே? தினவெடுக்க வில்லையோ; அந்தோ! என்று கதறினாள், எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி. சென்றங்கு செருமுனையில் சிதறிக் கிடந்தது செந்தமிழ் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள் அங்கு நந்தமிழ் நாட்டைக் காக்க ஓடிற்று இரத்த வெள்ளம். பிணக் குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள். மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை ; புலங்க மகன் பிறந்தபோதும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு பாக அவன் அழிந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டிக அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை.