மு. கருணாநிதி 19 அடடா! கருத்தெரிய பொய் சொன்ன கயவன் எங்கே? வாளிங்கே ! அவன் நாக்கெங்கே?- Bave இந்த வீர இசையைத் தலைவர் முடித்தார். பந்தல் அதிர்ந்தது, கைதட்டல். கையொலி ஓய்ந்த பிறகு தலைவர் சொன்னார், இந்தப் பாட்டு நான் எழுதியதில்லை. இதோ இருக்கிறாரே; இந்த மணமகன் எழுதியது என்று உற்சாகத்தோடு உரைத்தார் மீண்டும் பந்தல் அதிர்ந்தது. பக்கத்திலிருந்த புதுப்புறாவின் இளங்கன்னங் கள் ரோஜா வாயின. இதயம் எப்படி மலர்ந்ததோ; யாரறிய முடியும்! தலைவர் வாழ்த்துரையை முடித்தார். பரிசுகள் வழங்கும் படலம் ஆரம்பமாயிற்று. மண மகளின் உள்ளத்தை அருகிருந்த மணமகனைவிட அதிக மாக உணரக்கூடிய சக்திவாய்ந்த ஒருஉருவம் அந்தப் பந்தலிலே அமர்ந்திருந்தது. அதுதான் மணமகளின் தோழி விஜயா, கமலாவும் விஜயாவும் கல்லூரியில் மட்டு மல்ல; இளமையிலேயே இணைபிரியாதவர்கள், விஜயா வாழ்க்கைப் பாதையிலே பயணம் நடத்திக்கொண்டிருப் பவள். கமலா இன்றுதான் அடியெடுத்து வைக்கிறாள், கந்தனின் கை கோர்த்தபடி. அறிஞர்களின் பாராட்டுக் குரிய ஒரு அன்புத்துணை தன்தோழிக்குக் கிடைத்தது கண்டு விஜயாவுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி அந்த ஆனந்தத்தில் மெய்மறந்திருந்தாள். கணவன் மண மேடையில் புகழப்படும் போதெல்லாம் கமலா, விஜயா வைக்கெண்டைக்கண்ணால் பார்த்ததை விஜயாமட்டுமே உணரமுடிந்தது. பரிசளிப்புகள் முடியுந்தருவாயிலிருந் தன. இன்ப வெள்ளத்தில் எல்லாவற்றையும் மறந் திருந்த விஜயா திடுக்கிட்டு எழுந்தாள். பரபரப்புடன் மணமேடைக்கு ஓடினாள். தன் கையிலேயிருந்த ஒரு தாள் சுருளைப் பிரித்தாள்.
பக்கம்:நாடும் நாடகமும்.pdf/9
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை