பக்கம்:நாடு நலம் பெற.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற 105 யில் கற்றவர் களுக்கு மட்டுமே, அரசாங்க அலுவலகப் பணிகளிளும் அதன் சார்பாக உள்ள பிற நிலையங்களின் பணிகளினும் அரசாங்க மானியம் பெறும் பள்ளி, கல்லூரி போன்றவற்றினும் இடம் தரப்பெறும் என்று விதி கொண்டு வர வேண்டும். அப்படியே பிற மாநிலங்களில் செயலாற்றலாம் பிற மாநிலத்தவர் தமிழ்நாட்டில் தமிழ் வழியே கற்பவராயின் அவருக்கும் சலுகை தரப் பெற வேண்டும். இந்த முறை செயலில் வருமானால்,நிச் சயம் அவரவர் தாய் மொழி வழிக் கல்லூரிகள், பள்ளிகள் வழியே அவரவர் மொழி தழைத்தோங்கும். உலக நாடு களில் பெரும்பாலானவை இம்முறையினைத்தான் பின் பற்றுகின்றன. - அனைவருக்கும் கல்வி பற்றியும் சற்ற்ே எண்ணல் வேண்டும். அனைவரும் கல்வி கற்றால், தம்மை எதிர்க்கும் அறிவும் ஆற்றலும் பெற்றுவிடுவர் எனக் கருதி, ஒரு வேளை ஆங்கிலேயர், தொடக்க நாளில்- கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி நடத்திய நாளில், நாட்டுக்கல்வியைப் போற்றவில்லை, பின்பும் அவர்கள் கல்வியில் கருத்திருத்த வில்லை. எனினும் உரிமை வேட்கை மிக்கு, நாட்டு உரிமையில் நம் நாட்டு மக்கள் தீவிரமாக ஈடுபட்டபோது அவர்களைக் கண்துடைப்பதற்கு எனவோ அன்றி வேறு காரணத்தாலோ கல்வியில் கருத்திருத்தி வளர்க்க முயன்ற னர். தீண்டாமை ஒழிப்பு,கல்வி வளர்ச்சி போன்றவற்றில் மக்களை ஈடுபடுத்தினர். சற்றே கல்வி ஒரளவு வளர்ச்சி யுற்றதெனலாம். ஆனால், சுதந்திரம் பெற்ற பின்பும் ஆரம்பக்கல்வி அனைவருக்கும் கட்டாயம் என்று செய்த பின்பும், இன்னும் கோடிக்கணக்கில் இளஞ்சிறுவர்கள் பள்ளி செல்லவில்லை எனக் காண்கிறோம். தில்லி, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் தீவிரத் தண்டனை 西 rr7 س

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/107&oldid=782352" இலிருந்து மீள்விக்கப்பட்டது