பக்கம்:நாடு நலம் பெற.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நாடு நலம் பெற பெயரை- கண்ணப்பர்' என்று காலமெல்லாம் நிற்கும் பெயரைப் பிறந்த அன்றே (9.7.21) இவருக்கு இட்ட அப்பெற்றவர்களுக்குச் சிலை வைக்க வேண்டாமா! மூலிகைமணி கண்ணப்பர் அளவான கல்வி கற்று, முதலில் ஏதேதோ தொழில்களில் சில நாட்கள் உழன்றா ராயினும், காளைப் பருவமாம் இருபத்தொரு வயது எய்திய போது அந்தக் காளத்தி கண்ணப்பரே ஆனார். நல்லவர் துணையுடன் மூலிகைகளை ஆராயத்தொடங்கி, சிறுகட்டுரைகள் எழுதி, பின் "மூலிகைமணி' என்ற இதழை வேலூரிலேயே தொடங்கினார். பின் சென்னை யில் அதன் வளம் சிறக்க வழி வகுத்தார். தாம் மட்டு மின்றி, தம் மனைவி, மக்கள் அனைவரையும் இம் மூலிகைத் தொண்டில் ஈடுபடுத்தினார். இன்று சென்னை யில் அவர்தம் பணிகள் சிறக்கின்றன. அவர் 1979-இல் அமரரானபின், அவர் தந்த பொறுப்பை அவர்தம் மூத்த மகனார் வேங்கடேசன் ஏற்று மூலிகைகளை ஆயும் திறத்திலும் மூலிகைமணி' வெளியீட்டிலும் சிறக்கத் தொண்டாற்றி வருகிறார். அவர் பணி மேலும் சிறக்க என வாழ்த்துகின்றேன். மூலிகைமணி கண்ணப்பர் எனக்கு நாற்பது ஆண்டு களுக்கு முன்பே பழக்கமானார். நான் வணங்கும் தணிகை முருகனுக்கு ஆண்டுதோறும் பெருவிழா நடத்துவார். அதில் நான் பலமுறை கலந்து கொண்டிருக்கிறேன். அவர் மகனார் வேங்கடேசன் திருமணமும் அங்கே தான் நடந்தது. நானும் மணவிழாவில் கலந்து மகிழ்ந்தேன். கண்ணப்பர் அவர்கள் மூலிகைவளம் காணத் தமிழ் பயில் வதே சிறப்பெனக் கருதி, தம்மகனைப் ‘பச்சையப்பரில்' தமிழ் முதுகலை பயிலச்செய்தார். பின் வேங்கடேசன் அத் துறையிலே வல்லவராகி-ஆய்வு செய்து டாக்டர்’ பட்ட மும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பெற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/12&oldid=782380" இலிருந்து மீள்விக்கப்பட்டது