பக்கம்:நாடு நலம் பெற.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நாடு நலம் பெற அன்னை பொறுமையுடையவள் - நிலம் தண்மையு டையது. ஆனால் அதில் வாழும் மனிதர்கள் இயற்கை வாழ்வு அற்று, இரக்கமற்ற அரக்கர்களாக மாறும் போது, இயற்கை அன்னை பேசாமல் பார்த்துக் கொண்டி ருக்கமாட்டாள். சீறுவாள் - நிலம் பிளக்கும் - அழியும் கடலுள் ஆழும்; காணாத - கேளாத கொடுமைகள் நிகழும். இதைத்தான் நான் முன் கூறிய உலகொடு வாழ்ந்த உண்மை உணர்ந்த ஒளவையார் பாடிய காடா கொன்றோ நாடாகொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' - (புறம் 187) என்ற பாடல் நன்கு விளக்கிக் காட்டுகின்றது. நாடு காட்ாவதும், காடு நாடாவதும், மேடு பள்ளமாவதும், பள்ளம் மேடாவதும் ஆங்காங்கு வாழும் மக்களின் மன மொழி மெய்களால் ஆகிய வாழ்க்கையால் நிகழ்வன வேயாம். எண்ணிய் எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராக்ப் பெறின்' என்று மன உரத்தை வள்ளுவர் வரையறுக்கிறார். இந்த எண்ணம் நல்லதாக-நலம் பயப்பதாக-நாடுவாழ்வதாக அமையின் யாவும் நலமுறும். மற்றவரைக் கெடுக்கஅழிக்க- அவலத்தில் தள்ளும் எண்ணமும் அதன் வழிச் செயலும் அமையுமாயின் அதைக் கொள்ளுபவருடன் அவர்தம் உடமை - நாடு, நகரம் அனைத்தும் அழியும். எனவே, இந்த அடிப்படையிலேதான் திருச்செந்தூர் தாண்டி இருந்த க்டலில் இருந்த சூரபதுமன் நகரும், அதே நிலையில் தெற்கே இருந்த இராவணன் தென் இல்ங்கையும் இரணியன் நாடும் அழிந்தன. அவற்றொடு அண்டையில் இருந்த தமிழ் வழங்கிய நாடாகிய தென் மதுன்ர, கபாடபுரம் ஆகிய நகரங்களும் அழிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/126&oldid=782394" இலிருந்து மீள்விக்கப்பட்டது