பக்கம்:நாடு நலம் பெற.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 125. ALLL AAAAS LLL AAAAA AAAAMS SSSSSS -- •υμα-ιιαξ.--ι.Ε கபாடபுரம் தாண்டியே தென் இலங்கை இருந்ததென்ப தனை வால்மீகி நன்கு எல்லையிட்டுக் காட்டுகிறார். ஆழ்வார்கள் அப்பகுதியினைத் தென் இலங்கை'. எனவே, காட்டுவர். எனவே நாடு காடாவதும், மண் நீராவதும், மேடு பள்ளமாவதும் மானிடர் உள்ளத்து அடிப்படை யிலேயே அமைவது தெளிவு. மனிதன் ஒழுங்கு தவறினால், இயற்கையும் தன் நிலைகெடும்; பூகம்பம் உண்டாகும். மழை தவறும்; பிற கொடுமைகள் நிகழும். இவ்வாறு, நான் கூறுவது வேடிக்கையாகக்கூடத் தோன்றும். ஆனால் இன்றைய விஞ்ஞானமும் இந்த உண்மையில்தான் சென்று முடிய வேண்டும். இராவணன் விமானத்தில் பறந்தான் என்றால் கேலி செய்தவரும் பாண்டவர் நினைக்கக் கண்ணன் வந்தான் என்றால் இழித்துரைத்தவரும் இன்று. பல விமானங்களை - (REMOTE CONTROI) தொலைவி லிருந்தே இளக்குதல் என்றும் தொலைபேசி முதலியவற். றினையும் காண்கின்றனர். வலவன் ஏவா வான, ஊர்தி: (புறம் 27) என்று பாகனால் செலுத்தப்பெறாத விண்கலம் சங்க காலத்தில் சொல்லப்பட்டது என்றால் அதனை. நையாண்டி செய்த நல்லவர் இன்றைய நாட்டு நிகழ்ச்சி, களைக் கண்டு உணர வேண்டாமா! எனவே, இந்த ஒளவையார் ப்ாடல் அடிப்படையில் தான் மேடு பள்ள் மாதற்கும், பள்ளம் மேடாவதற்கும் காரணம் என அறிதல் வேண்டும். - மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் காவலர் பழிக்கும் இக்கண்ணகல் ஞாலம்' " - (புறம் 35 வெள்ளைக்குடி நாகனார்) என்பன சங்ககால அடிகள். சங்ககாலப் புலவர்கள் ஆய்ந்தே, உணர்ந்தே, அளந்தே தம் சொற்களைப் பயன் படுத்துவர். எனவே, இதன் வழி ஆராயின் பரந்த உலகம் கண்கொண்டு - கருத்தில் ஆராய்ந்து உணர்ந்த ஆண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/127&oldid=782396" இலிருந்து மீள்விக்கப்பட்டது