பக்கம்:நாடு நலம் பெற.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 நாடு நலம் பெற களில் சிறு அளவிலும் நில அதிர்வும், பூகம்பமும் உண்டா யின என நாம் நன்கு அறிவோம். ஆனால், சில ஆண்டு களுக்கு முன் பூனாவின் பக்கத்தில் கொய்னா அணை ஒட்டிய பூகம்பமும் இன்றைய மராட்டிய கிலாரி பூகம் பமும் நம்மை நடுங்க வைக்கின்றன. இந்த மாறுபாட்டுக் குரிய காரணங்களைப் பல அறிஞர்கள் ஆராய்கின்றனர். திருச்சி பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் எஸ். எம். இராமசாமி அவர்கள் பல காரணங்களைக் காட்டுகிறார். (The Hindu 17.10.93). வேறு சிலரும் விந்திய மலைக்குத் தெற்கே பூகம்பமும் வந்ததை எண்ணி எண்ணி வியந்து வியந்து- பல அறிஞர்கள் கண்ட ஆய்வு பொய்த்து விட்டதே என்று அதற்குரிய காரணங்களைக் காண முயல் §gir Dorff. "Quake Explodes Myth About PENINSULAR INDIA என்ற தலைப்பில் இந்துவின் தனிச் செய்தியாளர் 3.10.93 இந்து (THE HINDU) இதழில் இது பற்றி எழுதி யுள்ளார். அதில் இந்திய நாடு ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப் பெற்றதைக் காட்டி, அதில் முதல் பிரிவில் (ZONE-I) நில நடுக்கம் பூகம்பம் வராது என்று இதுவரை கண்ட உண்மை பொய்த்து விட்டதே என வருந்தி, இது பற்றி இத்துறையில் வல்ல அறிஞர்களை ஆய்வு செய்யு மாறு கேட்டுள்ளார். உலகெங்கணும் இதனை முன் கூட்டி அறிபவர் இலர் என்று ஒரறிஞர் கூறியதாகவும் காட்டி யுள்ளார். அது பொருந்தாது. எறும்பும் புள்ளும் எதிராக வருவதை அறியும் ஆற்றல் பெறும்போது, மனிதனால் இந்த நிலநடுக்க அதிர்வை முன் கூட்டி அறிய முடியாது என்பது பொருந்துமாறில்லை. இயற்கை அன்னை மிகக் கொடியவள் அல்லள்- மனிதனைப் போன்று. நாளிதழ்கள் வழியே, இப்பெரும் பூகம்பத்துக்கு முன் பல முறை அசைந்து நிலம் என்னும் நல்லாள் எச்சரிக்கை விடுத்தும்- மக்கள் அதை எடுத்துக் கூறியும், கண்ணிருந் தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாழ்ந்த நாமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/144&oldid=782435" இலிருந்து மீள்விக்கப்பட்டது