பக்கம்:நாடு நலம் பெற.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நாடு நலம் பெற திருக்குறளை உந்து வண்டியில் எழுதிவிட்டு அவர் நாளைக்கொண்டாடி விடுவதிலேதான் நம் பணி முடிந்து விடுகின்றது. எதற்கும் ஒரு நாள் மட்டுமே ஒதுக்குகிறோம். காந்தி விழா ஒரு நாள்- உழவர் விழா ஒரு நாள், அஞ்சல் விழா ஒரு நாள்-இப்படி அடுக்கடுக்காக ஒரு நாள் விழாவோடு நம் வழிகாட்டிகளை- வழக்கமான பண்பு களைப் பற்றிப் பேசி முடித்துக் கொள்ளுகிறோம். "கூட்டத்தில் கூடி நின்று கூடிப் பிதற்றல் இன்றி நாட்டத்தில் கொள்ளாரடி- கிளியே நாளில் மறப்பாரடி’ என்ற பாரதியாரின் பாடல்களுக்குச் சான்றாக நாம் இன்று வாழ்கின்றோம். இந்த நிலை நாட்டில் உள்ள வரையில் எல்லாக் கொடுமைகளும் இயற்கையின் சீற்றமுடன் நிச்சயம் வந்தே தீரும். வெறும் பிரசாரத்தால் நாடு திருந்தாது. செயல் வேண்டும். முன்னோடிகள் வாழ்ந்து காட்ட வேண்டும். தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளராக" வாழ வேண்டும் எவ்வுயிரும் பராபரன் சன்னதியதாகும்' என்ற உணர்வில் எல்லா உயிர்களையும் ஒம்பிப் பாது காக்க வேண்டும். உற்றார், மற்றார் என்னாது, இன்னார் இனியார் என்னாது, எல்லாரையும் ஒத்து நோக்கும் பண்பும் உணர்வும்- சிறப்பாக ஆளுவோருக்கும் கட்டாயம் இருத்தல் வேண்டும். சாதி- சமயச் சழக் கெல்லாம் நாட்டை விட்டு அகல வேண்டும். உரிமை பெற்ற பின்தான்- யாதொரு வேறுபாடுமற்ற நாடு (Secular State) என்று பெயர் சூட்டிய பின்தான் எல்லா வேறுபாடுகளும் அதிகமாக உள்ளன. மாண்புடை எம் ஜி. ஆர். தெருப் பெயர்களில் ஜாதிகளை ஒழித்தார். ஆனால் இன்று சாதிகளின் பெயரால் மாவட்டங்கள் உருவா கின்றன. அவர் தாம் உயிரொடு இருக்கும் வரையில் தம் பெயரில் எதுவும் கூடாது என்ற அறநெறியில் வாழ்ந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/152&oldid=782453" இலிருந்து மீள்விக்கப்பட்டது