பக்கம்:நாடு நலம் பெற.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 நாடு நலம் பெற சீதோஷ்ண நிலை மாறுபாடு, பருவ கால நிலையில் மாற்றம், அமில மழைப்பொழிவு, இயற்கையின் சீற்றங் கள் இவை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க என்ன வழி என்பது பற்றி 30 நாடு களுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், சுற்றுச் சூழல் பாதிப்பு, வாயு மண்டலத்தில் ஏராளமான நச்சுக் கலப் பால் ஏற்பட்ட மாற்றம் ஆகியவற்றை ஆய்ந்து இந்த பிரச்சினைக்கு குளோபல் வார்மிங்' எனப்பெயரிட்டனர். குறிப்பாக பிரிட்டன் போன்ற குளிர் நாடுகளில் பரவி வரும் மாசு பிரச்சினையில் பருவ காலங்களில் மாற்றம் ஏற்படத் துவங்கியிருக்கிறது. வழக்கமாக இருக்கும் சீதோஷ்ண நிலையும் மாறிவிட்டது. . தொழிற்சாலைகள் வெளிவிடும் நச்சுப் புகைகள், வாகனப் பெருக்கத்தால் ஏற்படும் கார்பன் டை ஆக்சைடு புகை பாதிப்பு இவை சுற்றுச் சூழலில் அதிகமாக ஏற் படக் காரணமாகி விட்டது. - கிட்டத்தட்ட 30 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 0 வழக்கமாக உஷ்ணமாக இருக்கும் பிரதேசங்கள் கடற்கரை ஒரப்பகுதிகளில் பெரும் பாதிப்பு இருக்கும். D ஏற்கனவே வெப்பம் வாட்டும் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும். குறைந்த அளவு விளைச்சல் உள்ள பகுதிகளில் மேலும் பாதிப்பு ஏற்படும். ற வெப்பத்தால் மழைக்காலக் காடுகள் மாறி வெறும் புல் தரைகளாக ஆகி விடும். 0 பாலைவனங்களில் வெப்பம் அதிகரிக்கும். p பணி மூடிய மலை முகடுகளில் உள்ள பனி உயரம் பாதியளவு குறையும். இதனால் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்து, புன்ல் மின் நிலையங்கள் பாதிக்கப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/168&oldid=782487" இலிருந்து மீள்விக்கப்பட்டது