பக்கம்:நாடு நலம் பெற.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 23 கின்றோம். பனி அவர்களை ஒன்றும் செய்யாது. பனி கொடுமை வாய்ந்தது-மக்கள் இதை நன்கு உணர்வர். பனிக்காலம் நல்லது என்பது ஒரு தொடர்-ஐயோ அது கொடிய காலம் அல்லவா?' என்று கேட்டால் ஆம்! என்று கூறி, அத்தொடரை, பனிக்கு+ஆலம்+நல்லது எனப் பிரித்து, பனிக்காலத்தைக் காட்டிலும் விடம் நல்லது எனப் பொருள் காட்டுவர். எனவே விடத்தினும் கொடியது பணியாகும். அதற்கு மாறாகவே வையகக்' குடில்கள் அமைகின்றன. நெல்லிக்கனியும் அக்காலத்தில் பழுத்துஉதவுவதே. பனிக்கு மாற்று நெல்லிக்கனியாகும். வைகுண்ட ஏகாதசி-சிவராத்திரி போன்ற விரத முடிவில் கிராமங்களில் இந்த நெல்லியினையே பயன்படுத்துவர். காலம் அறிந்து கடவுள் அளித்த வரப்பிரசாதம் அது. இன்னும் அது போற்றப்பெறுகின்றது. சியவனப் பிரா சனம்’ என்ற பெயரால்-ஒரு முனிவர் பெயரால் அது போற்றப் பெறுகின்றது; லேகியமாக மக்கள் நலம் காக்கப் பயன்படுகிறது. அப்பெயர் அதற்கு எப்படி வந்தது? . . r ஒரு குளத்தின் கரையில் நிறைய நெல்லி மரங்கள் இருந்தன. அவற்றுள் பழுக்கும் நெல்லிக்கனிகள் அக் குளத்தில் விழுந்து, நீரோடு நீராக அமைந்து நலம் தந்து நின்றன. சியவனர்' என்ற முதிய முனிவர் அக்குளக்கரை யில் சில நாள் தங்கினார் போலும், அதன் நீரை அடிக் கடி பருகியிருப்பர். சில நாளில் அவர் முதுமை நீங்கி இளமை பெற்றுத் திகழ்வதைக் கண்டார்-திகைத்தார்காரணத்தை ஆராய்ந்தார். அக்குளத்து நீரே காரணம் என அறிந்தார். அதற்குக் காரணம் சுற்றியுள்ள நெல்லி மரங்கள் அளித்த கனிகளே என உணந்தார். நெல்லிக் கனியை வாழ்த்தினார். அவ்வாறு முதுமை மாறி இளமை எய்திய அந்த முனிவர் பெயராலேயே நெல்லிக்காய் லேகியம், சியவனப் பிரசாதம் என வழங்குகின்றது. ஒளவையாரைப்போல அவரும் நெடுங்காலம் வாழ்ந்திருந் திருப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/25&oldid=782513" இலிருந்து மீள்விக்கப்பட்டது