பக்கம்:நாடு நலம் பெற.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 _ _நாடு நலம்பெற அதனாலே எலும்புகள் சேரும் பதினாறு இடங்களில் இவற்றைத் தீட்டுகின்றனர். நெற்றி, ம்ார்பு, கண்டம், இருபுஜங்கள், இருகை முட்டிகள், இரு மணிக்கட்டுகள், இருவிலா எலும்புகள் இருகால் முட்டிகள்,முதுகு, வயிறு ஆகிய பதினாறு இடங்களிலும் இவற்றை அணிபவர் இன்றும் உள்ளனர். அவை தூயனவாக- அமைய வேண் டிய வகையில் அமையப் பெற்றனவாக இருப்பின், அவற்றை இடுகின்றவர்களுக்கு எந்தவிதமான மூட்டுவலி -யும், பிற நரம்பு, எலும்பு பற்றிய நோய்களும். வாரா என்பது திண்ணம். நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனைப் பாடும்போது அங்கே சூழ்ந்துள்ள மரம், செடி, கொடி சோலை முதலியவற்றையே கண்டு களிக்கின்றனர். தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடம்" (குலசேகரர்) - 'முருகமர் சோலைசூழ் திருமுல்லை வாயிலாய் (சுந்தரர்) 'கானார்ந்த பொழிற்சோலைகாவைப்பெற்றாய். (அம்பர்) வரை சேரும் முகில்முழவ மயில்கள் பலநடமாட வண்டு பாட விரைசேர் பொன் இதழிதர மென் காந்தள் கையேற்கும் மிழலையாமே (சம்பந்தர்) என்ற இவை ஒரு சில எடுத்துக்காட்டுக்கள். பன்னிரு திருமுறை, நாலாயிரப்பிரபந்தம் இரண்டிலும் உள்ள இயற்கை வர்ணனைகளைப்பற்றி ஒரு ஆய்வு நூலே எழுதலாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/42&oldid=782551" இலிருந்து மீள்விக்கப்பட்டது