பக்கம்:நாடு நலம் பெற.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 45 வில்லியார் கூறுவார். அவனுக்கு எதிராக இறைவனு டைய கொன்றை மாலையை வீசினார்கள். அது இறைவன் மாலை யாதலானும் கொன்றையின் சிறப்புக் கருதியும் அஞ்சி அதனை மிதியாது மதித்து, அவன் அதைக் கடந்து கெளரவர் சேனைமேல் செல்ல முடியவில்லை. தயங்கி நின்றான், பலியானான். ஆம்! வீர அபிமன்யூ அக்கொன்றை மாலைக்கு அளித்த ஏற்றத்தை நாம் அளித் தால், நம்மை அது காக்கும். இவ்வாறு கொன்றையினைப் பற்றிப் பலப்பல புலவர்கள் பலப்பலவாகப் பாராட்டுகின் றனர். எனவே இறைவனுக்கு உகந்த பச்சிலைகள் எவருக் கும் உகந்தன எனக் கொண்டு எல்லாப் பச்சிலைகளையும் நம் நோய் நீக்கத்துக்குப் பயன்படுத்த வேண்டும். நெல் இருக்க.உமிகுற்றுவார் போல, விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்தவாறு போல' இன்றைய மனிதன், எதை எதையோ நாடி எல்லாவற்றையும் இழக்கின்றான். நின்று நீடு நினைந்தால் நம் மூலிகை நம்மைக் காக்கும். இறைவனைப்பற்றித் திருத்தசாங்கம் பாடிய மாணிக் கவாசகர் தாளி, அருகு இரண்டையும் அவனுக்கு மாலை யாகக் கூறுகின்றார். கிளியை நோக்கி அவர், 'ஆயமொழிக் கிள்ளாய்! அள்ளுரும் அன்பான் மேயபெருந் துறையாக மெய்த்தார்என்-தீயவினை நாளும்அணு காவண்ணம் நாயேனை ஆட்கொண்ட தாளி அறுகாம் உவந்த தார்’ (தசா:9) எனப் பாடுகின்றார். ஆம், கொன்றை, அறுகு, வில்வம் போன்றவற்றுடன் தாளியும் இறைவனுக்கு உகந்தது. அவன் யோகியாய் இருந்து எவர்க்கும் யோகத்தை அளிப்பதோடு, போகியாய் இருந்து போகத்தையும் தருவன்' 'ஆதலால், இப்போகத்துக்கு வழிகாட்டும் இத் தாளியினையும் அணிந்திருக்கின்றான். தாளின்யப்பற்றி குணவாகடம் கூறுவதைக் கானுங்கள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/47&oldid=782561" இலிருந்து மீள்விக்கப்பட்டது