பக்கம்:நாடு நலம் பெற.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - நாடு நலம் பெற பார்வதி, சீதேவி, பூதேவி இம்மூவரும் தாமரையொடு தொடர்பு கொண்டுள்ள நிலையினை, விரும்பும் நின்செங்கை தாங்கலால் இரண்டாம் வேற்றுமை விரித்துரை செய்யாது அரும்பு தாமரை தாங்குவார் எனலான் மூன்றாவதும் படுசொ லும் விரிக்கும் பெரும்புவி மலர்ப்பூ மாதெனும் பெயர்கள் பெரும்வினைத் தொகைகுணத் தொகைப்பேர் கரும்புபைங் கமுகில் பொலிதிரு வானைக்கா அகில்ாண்ட நாயகியே' என அகிலாண்டேஸ்வரி மாலையில் அதன் ஆசிரியர் இலக்கிய நயம் தோன்ற-இலக்கணநெறி விளங்க எழுதியுள்ளார். சீதேவி, பூதேவி இருவரும் அகிலாண்டநாயகியின் இரு கைகளையும் தாங்குகின்றனர். அந்நாயகியின் கைகள் தாமரை மலர் போன்று உள்ளன. எனவே தாமரையைத் தாங்குவர் என இரண்டாம் வேற்றுமைப் பொருளில் அவர்கள் சிறக்க வேண்டும். ஆனால் தாமரையால் தாங்கப்பெற்றவர் என்று மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையால் உலகத்தவர் அவர்களை அழைக்கின்றனர் எனச் சாதுரியமாகப் பாடு கின்றார். பின் புவிமாது, மலர்மாது என்ற இருபெயர் களையும் புவியாகிய மாது' எப்ை பண்புடைத் தொகை யாகவும், மலர்மாது, மலர்ந்தமாது-மலர்கின்ற மாதுமலரும்மாது. என்ற காலங்கடந்த பெயரெச்சமாம் வினைத் தொகையாகவும் காட்டுகின்றார். இப்பாடல் இவ்விடத்தில் இப்பொழிவுக்கு-இங்கே ஏற்றதன்றாயினும் தாமரையை நினைக்கும்போது-அதற்குரியவரை நினைக் கும்போது அதில் தங்கியும் தம் சிறப்பினைப்பெற்றும் உள்ள அம்மூவரும் என்முன் நிற்கின்றனர். அத்துடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/50&oldid=782569" இலிருந்து மீள்விக்கப்பட்டது