பக்கம்:நாடு நலம் பெற.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நாடு நலம் பெற கல்லாத-அறிவில்லாத மனித உடம்பொடு உள்ளவனை விலங்கோடு சேர்த்துக் காட்டுகின்றார். எனவே பண்டு தொட்டு வந்த இந்த உண்மை 'மனிதன் யார் எனக் காட்டுகின்றது. தமிழில் மட்டுமன்றி, பிறமொழிகளிலும் இந்தஉண்மையே வலியுறுத்தப் பெறுகின்றது. Rudyard Kiping என்பவர் மனிதப் பண்புகளைத் தொகுத்து இறைவன் காட்டுவதாக அறிவித்து, அவற்றை எல்லாம் உடையவனானால் பிறகு நீ மனிதனாவாய் என்று காட்டி, “Then, you will be Called the Man, my Son' stem (plå கின்றார், எனவே, மனிதனுக்கு முதலாவதாக வேண்டப்படுவன கல்வியும் அதன் வழியே பெறும் அறிவும் ஆம். கல்வி வழியே அறிவு வளரும் என்பதனை வள்ளுவர். 'தொட்டனைத் துாறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு எனக் காட்டுவர். எங்கோ ஒரு சிலர் இறையருளாலும் முற்பிறப்பில் கற்ற கல்வியின் நிலையாலும் அறிவுடையவர்களாக-நல்ல ஞானம் பெற்றவர்களாக இருக்கலாம். சமயத்தலைவர் சிலர் அந்த வரிசையில் வைத்து எண்ணத் தக்கவர்களே! இனி, இக்கல்வியைப் பற்றியும் அறிவைப் பற்றியும் வள்ளுவரும் பிறரும் காட்டும் விளக்கங்களைக் காணலாம். மனிதனுக்குப் பிற அழகெல்லாம் அழகல்ல என்றும் கல்வி அழகே அழகு என்று ம் நாலடியார் காட் டு கின்றது. ‘குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு" என்பது அதன் கல்வி எனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/76&oldid=782626" இலிருந்து மீள்விக்கப்பட்டது