பக்கம்:நாடு நலம் பெற.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற 85 உரிமை பெற்று அரை நூற்றாண்டு ஆயினும், ஆங்கிலேயர் நம்மை விட்டுப் போயினும், மக்கள்சிறப்பாகத் தமிழர்கள் அவர்தம் மொழிக்கு அடிமையாகி விட்டனரே, வீடுகளில்கூட ஆங்கிலத்தில் பேசுவதைத் தானே நாம் பெருமையாகக் கொள்ளுகிறோம். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன் திரு. வி.க. அவர்கள் இது பற்றிச் சொல்லியது நினைவிற்கு வருகின்றது. ஒரு வங்காளி மற்றொரு வங்காளியைக் கண்டால் வங்க மொழியில் பேசுகிறான். ஒரு குஜாரத்தி மற்றொரு குஜராத்தியைக் கண் டால் அவன் தாய் மொழியில் பேசு கிறான். ஆனால் ஒரு தமிழன் மற்றொரு தமிழனைக் கண்டால் தமிழிலா பேசுகிறான்' என்று ஆவலித்துக் குழைய எழுதியுள்ள்ார். தமிழ்மொழியினைக் கொலை செய்பவன் தமிழலே என்பதை, 'தமிழினைப் போல் இனிமை மொழி சுற்றுதற்கும் இல்லை. இந்நாள் தமிழரைப் போல் மொழிக் கொலையில் தலை சிறந்தோர் எவர் உளரே என நைந்து நைந்துபாடுகிறார். ஆம்! கால்டு வெல், போப், வீரமாமுனிவர் போன்ற மேலை நாட்டு அறிஞர் கள் தமிழைப்போற்றி வளர்த்த நிலையில், தமிழ் நாட்டிற் பிறந்து வாழ்ந்தவர்கள் தமிழைக் குறை கூறுகின்றனர். 'தமிழ், இந்திய நாட்டுத் தென் கோடியில் விட்டுவேலை செய்கின்ற கீழ்ச்சாதி மக்களால் பேசும் மொழி என ஒருவர் இலண்டனில் கூறினார் சென்னைப்பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதியினை வெளி யிட்ட தமிழர்-அதன் ஆசிரியர் தமிழர்-என்றால் விளிம்பி லாப் பாத்திரம் என்கின்றார். தமிழர் என்பதற்கு நேராக Referடம்ளர் எனக்காட்டி அங்கே விளிம்பில்லாப் பாத்திரம்' என விளக்கம் தந்துள்ளார். இப்படித் தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/87&oldid=782648" இலிருந்து மீள்விக்கப்பட்டது