பக்கம்:நாடு நலம் பெற.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நாடு நலம் பெற இரண்டிலும் நுனிப்புல் மேயும் அவலநிலையை உண்டாக்குகின்றனர். பள்ளிகளிலும் இத்தகைய அவல நிலை உள்ளது. பதினோராம் வகுப்பிற்கு அரசாங்கத் தேர்வு இனி நடை பெற உள்ளது. ஆனால் அத்தேர்வில் வெற்றி பெறாதவர்களை மேல் வகுப்பிற்கு அனுப்பிவிட வேண்டும் என்று ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்ததாகப் படித்து வியந்தேன். சில ஆண்டுகளுக்குமுன். பள்ளியில் பயிலும் மாணவர் எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு வரை தேர்ச்சி பெறாததற்காக நிறுத்தக் கூடாது என்று அரசாங்கமே ஆணையிட்டுள்ளது. பள்ளிக்கூடத்தில் பதிவு செய்து விட்டு, ஒரு நாள் கூட வராவிட்டாலும், ஆண்டுத்தேர்வு எழுதாவிட்டாலும், அம்மாணவன் மேல் வகுப்பிற்குச் செல்லத்தகுதி பெற்று விடுகிறான். இந்த நிலையில் கல்வியின் தரம் எப்படி உயரும்? நல்ல வேளை இந்த முறை இப்போது இல்லை என எண்ணுகிறேன். எல்லோரும் பயில வேண்டும் எனக் கட்டாயமாக்குவதில் தவ்று இல்லை. அது நம் நாட்டுக்குத் தேவையும்கூட. ஆனால், படிக்காவிட்டாலும், தேர்ச்சி பெறா விட்டா லும், பள்ளிக்குப் பிள்ளை வராவிட்டாலும் எல்லாருக்கும் தேர்ச்சி பெற்ற நிலையினைத் தருதல் தேவைதானா? முறைதானா? எண்ணிப் பாருங்கள்! - பல்கலைக் கழகங்கள் உரிய ஆய்வுப் பட்டங்கள் வழங்குவதிலும் சரியான முறை மேற்கொள்ளவில்லை. இது பற்றிய அவல நிலையினை அலசி, விளக்கி இரண்டொரு கட்டுரைகள் சில ஆண்டுகளுக்கு முன் 'இந்து ஆங்கில நாளிதழில் வந்தன. ஆனால் அதை எந்தப் பல்கலைக் கழகமும் மறுக்கவில்லை. எனவே அந்த அவல நிலை இன்றும் நீடிக்கிறது என்பதுதானே 32_6üßf68)Lí). - மேற்பார்வையாளரே தேர்வுக் குழுவின் அமைப் பாளராகிறார். அவருக்கு வேண்டிய இருவர் அக்குழுவில் இடம் பெறுவர். பின் முடிவு எப்படி இருக்கும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/96&oldid=782668" இலிருந்து மீள்விக்கப்பட்டது