பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாட்டேன்’ 9 i

இப்படி வெளிப்படையாகச் சொல்கிற வரைக்கும் தாய்க்கு விஷயம் புரியவில்லை. இதற்கு மேல் என்ன செய்வாள்? கிழவனைக் குமரனுக்கும் வித்தை அவளுக்குத் தெரியாதே!

சோளச் சோறு தின்ன மாட்டேன்

சொன்னபடி கேட்க மாட்டேன் கரைச்ச கிழவன் கிட்டே

நானிருந்து வாழ மாட்டேன் என்ற வார்த்தைகளில் உண்மையான உணர்ச்சி வெளிப் படுகிறது. 'கிழவன் கிட்டே வாழவே முடியாது; சில காலம் பல்லேக் கடித்துக்கொண்டு வாழலாம்; இருந்து வாழ முடியாது. நல்ல பருவம் உள்ள நான் இருந்து வாழ்வதென்பது கனவிலும் நடக்காத காரியம்' என் றெல்லாம் வியாக்கியானம் செய்யும்படி அந்தக் குமரி சொல்லித்தன் சுதந்தரத்தை நிலை நாட்டுகிருள்.

இந்தப் பிரத்தியட்ச வாழ்க்கையை உலகத்திலே

காண்கிருேம்; நாடோடி இலக்கியம் அதைக் காட்டுகிறது.

புலவர்களின் இலக்கியத்தில் தேடிப் பார்த்தால் கிடைக்குமோ என்னவோ!