பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1G சிரிப்பு மூட்டும் பாடல்கள்

நவரசெமன்று கணக்கெடுத்துச் சொல்கி மூர் களே, அந்த ரசங்கள் ஒன்பதையும் காவியங்களி.ே கண்டு புலவர்கள் மனமகிழ்ச்சி அ ைட கி ரு ர் க ள். உலசத்திலே நிகழும் நிகழ் சிகளை நேரிலே பார்த்து அநுபவிக்கும்போது உணர்ச்சிதான் உண்டாகிறது: அதையே புலவன் தன்னுடைய கவியுலக நிகழ்ச்சியாக மாற்றும் போது ரசம் பிறக்கிறது. தன்னுடைய குழந்தையை இழந்து விட்ட தாய் புலம்புகையில் நமக்கு உண்மையான சோக உணர்ச்சி ஏற்படுகிறது. "கடவுளே! நம்முடைய பகைவனுககும் இத்தகைய துக்கம் வரக் கூடாது' என்று பிரார்த்திக்கிருேம் தாய் அழும்போது நம் கண்ணிலும் நீர் துளிக்கிறது. -

அரிச்சந்திரன் கதையில் மயான காண்டம் பார்க்கும் போது சந்திரமதியின் புலம்பல் மனத்தை உருக்குகிறது. நாமும் அழுகிருேம். அப்பொழுது பிறப்பது சோகரசம்; வெறும் சோகமல்ல: அதாவது அந்தச் சோகம் போவி யானது. இலக்கியச் சுவையால் உண்டானது. அந்த அழுகையின் அடித்தளத்திலே இன்பத்தான் இருக்கிறது. தன் குழந்தையை இழந்த தாயின் அழுகையை மீடடும் கேட்க விரும்பமாட்டோம். அது ஆதிமுதல் அந்தம் வரை யில் அழுகை, துக்கமயமான அழுகை. நாடகக் தில் வரும் சந்திரமதி புலம்பலையோ காசு கொடுத்துப் பல முறை கேட்கிருேம். புதிய நடிகன் வந்து நடிக்கிருனென்ருல்,

• 7-5673ఇ; பார்த்ததுதானே? என்று நினைப்பதில்லை. அதைப்போய்ப் பார்த்து இன்புறுகிருேம். நம் கண்ணிலே நீர் துளித்தாலும் கருத்திலே இன்பம் துளிக்கிறது. அது தான் ரசம். . . -