பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிப்பு மூட்டும் பாடல்கள் 93

ஒர் உவமை சொல்லுகிறேன்: பாகற்காயைக் கடித்தால் நாக்கெல்லாம் கசந்து வழிகிறது; வாயிலெடுக்க வருகிறது. ஆனல் சர்க்கரையால் பாகற்காயை போலப் பண்ணி நிறம் பூசின மிட்டாய் வருகிறது. அதைப் பார் தால் அசல் பாகற்காயைப்போலவே இருக்கிறது. ஆளுல் அதைக் கடித்தால் இனிக்கிறது. சர்க்கரை யாலே மாம் பழம்போலப் பண்ணலாம்; எலுமிச்சம் பழமும் உருட்ட லாம்: மிளகாய் மாதிரியே தோற்றும்படி அமைக்கலாம்.' எல்லாவற்றிற்கும் உருவந்தான் பேதமே ஒழியச் சுவை ஒன்றுதான்: இனிப்புத் தான்.

து சமென்று சொல்வது இந்த இனிப்பைப் போன்றது. பலவகையான ரூபபேதங்கள் அதில் உண்டு. சோகம், ஹாஸ்யம், ரெளத்திரமென்று வெவ்வேறு வகையாகச் சொன்னலும் எலலாவற்ருலும் விளைவது இன்பம் ஒன்றே.

இந்த ரசத்தைப்பற்றி அலங்கார சாஸ்திரப் புலவர் கள் புத்தகங்கள் எழுதிக் குவித்திருக்கிருர்கள். இலக்கியக் கர்த்தர்கள் ரசங்கள் பில்கும்படியான அருமையான கவிதைகளைப் பாடி இருக்கிரு.ர்கள்.

இலக்கியப் புலவர்கருக்கு மட்டும் ரச உணர்ச்சி ஏக போக உரிமையன்று. ரசம் அல்லது கவையை உணரும் ஆற்றலுள்ள ஒவ்வொருவனுக்கும் ரகம் சொந்தமே! மனிதனுடைய உணர்ச்சியிலே பிறந்த ரசம் வார்த்தை யிலும், செயலிலும் உருவத்தை அடைகிறது.

வெறும் பேச்சிலே, தினசரி மனிதர்கள் பேசும் சம்பாஷணையிலே ரசம் இல்லையா? ரசமாகப் பேசு கிருன்' என்று சில பேரைப்பற்றி நாம் மதிப்புரை சொல்லுகிருேமே! அந்தப் பேச் செல்லாம் ரசத்துக்கு இருப்பிடந்தான். - -

ஒரு கோழையைப் - பார்த்துப் பரிகசிக்கிருேம்; இவன: இவன் பெரிய வெண்ணெய் வெட்டிச் சிப்பா யல்லவா’ என்கிருேம். நாமும் சிரிக்கிருேம்; கேட்ட