பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இயற்கைப் பாட்டு

உலகம் முழுதும் சங்கீத மயம். இசையி னிமை சூழ்ந்தது இயற்கை. இயற்கையின் எழிலைக் கண்டு இன்புறுவதற்குச் சிலரே கண் படைத்திருக்கிரு.ர்கள். அவ்வாறே இயற்கையில் எழும் இன்னிசையைக் கேட்டு நுகரும் ஆற்றல் சிலருக்கே இருக்கிறது. காற்று, மரங் களுக்கிடையிலே .ெ ம ல் ல த் தவழ்ந்து அவைகளின் இலைகளை அ ைச த் து ப் பாடுவதைக் கேட்பவர்கள் எவ்வளவு பேர்? ஒவ்வோர் இலையும் காற்றென்னும் இசைப் புலவனுக்கு ஒவ்வொரு ஸ்வர ஸ்தானமாக உதவுகிறது. மலே அருவி தாவிக் குதித்துத் த்வழ்ந்து வருகிறதே. அதன் ஒட்டத்திலே அமைந்திருக்கும் ஒல் லொலியின் இன்னிசையை எல்லாரும் அநுபவிக்க முடிகிறதா? வீணையின் ஸ்வர ஸ்தானங்களின்மேல் நடக்கும் விரல் இசையை உண்டாக்குகிறது; அருவி யெனும் மங்கை மலேயையே வீணையாக்கித் தன்னுடைய ஒட்டத்திலேயே சங்கீதத்தைப் பிறப்பிக்கிருள். அவள் தாண்டிக் குதிக்கும்போது முத்தாய்ப்பு விழுகிறது. மெல்லெனச் செல்லும்போது நிரவல் செய்கிருள், ஆற்று நீர் ஒசையிலே, அமைந்து அடங்கி எழும் நாதத்திலே, இசையின் இனிமை இருக்கும் இரகசியத்தை யார் அறிந்திருக்கிரு.ர்கள்? வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடல் சதா ஒலமிட்டுக் கொண்டிருக் கிறதே, அதனுடைய பிரணவ கோஷத்தைச் செவியால் நுகரும் உள்ளம் படைத்தவர்கள் எத்தனை பேர்? உலகத்துப் பேரொலியை யெல்லாம் அடக்கி மீதுார்ந்து எழுந்து இசைக்கும் அந்த மகோததியின் நாதத்திலே தோற்றும் பேரமைதியை உணர்ந்தவர் யார்?