பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 9) பரதேசியின் உபதேசம்

நாடோடிப் பாடல்களிலே ஞான மார்க்கத்தை உப தேசிக்கும் பாடல்கள் பல உண்டு. பிச்சை வாங்கி உண்ணும் பரதேசிகள். முன் காலத்தில் அந்தப் பாடல் களைப் பாடி வருவார்கள். பாட்டைக் கேட்கும்போது மனிதனுக்கு உடம்புக்குள்ளே உயிர் ஒன்று இருக்கிறது என்ற ஞாபகம் வரும்; இந்த மண்ணுலகத்துக்குப் புறம் பேயும் வாழ்வு உண்டென்பது தெரியவரும்; தினந் தோறும் நாம் செய்யும் வேலைகள் நமக்காகச் செய்வன அல்லவென்ற இரக்கம் உண்டாகும். -

கந்த வனத்திலோ ராண்டி - அவன்

நாலாறு மாசமாய்க் குயவனை வேண்டிக் கொண்டுவந் தானெரு தோண்டி -அதைக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி என்று பரதேசி பாடும்போது, அதனுள்ளே பொதிந்த பொருளை நாம் உணர்ந்து, சிந்தனையில் ஆழ்கிருேம்.

'உலகமாகிய நந்தவனத்திலே நல்ல பூச் செடி களைப் பயிர்பண்ணி, ஆண்டவனுக்கு அர்ச்சண் பண்ன வல்லவா வந்திருக்கிருேம்? நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி இந்தத் தோண்டி கிடைத்திருக்கிறது. இந்தத் தோண்டியைச் சரியானபடி உபயோகித்துச் செடிகளுக்கு நீர் வார்த்து. நந்தவனம் செழிக்கப் பண்ணவேண்டும்ே. அப்படியில்லாமல், இந்தக் கருவியாகிய தோண்டியினிடம் மயங்கிப்போய், நம் லட்சியத்தையே மறந்து தலைக்ால் தெரியாமல் குதிக்கிருேமே! நமக்கு என்ன லாபம்: