பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 நாடோடி இலக்கியம்

மண்ணிலிருந்து பழம் வரைக்கும் தொடர்ந்து வந்த பாட்டைப் படகை மறிப்பது போல மறித்து, 'உன்னை நம்பி நானிருக்கேன்' என்று தொடர்பு படுத்தி முடிக் கிருன் படகுக்காரன். அவள் முகம் நாணத்தால் சிவக்கிறது. பாட்டின் மோகன ஒலியும் பொருளும் அவளிடத்தே நிறைவு பெறுகின்றன. மண்ணிலிருந்து அவன் அஸ்திவாரம் போட்டுக்கொண்டது கன்ரிக்கு மேற் கனி யாகிய அவளை மேலே காண்பதற்காகத்தான். விஷயத்தை நேரடியாகச் சொல்லாமல் எங்கேயோ ஆரம்பித்து அழகிய நிலைக்களனை ஏற்படுத்தி அதன் முடியாக, முக்கியக் கருத்தை அமைக்கும் கவிஞன், எழுத்தாளன் ஆகியவர்களுடைய இனத்தைச் சேர்ந்த வனுக இருக்கிருன் இந்தப் படகுக்காரன்.

ஏலேல சிங்கன் என்று ஒரு பெரிய செல்வன் மயிலாப்பூரில் இருந்தாளும். திருவள்ளுவருடைய மாளுக்கன் அவன்; பெரிய தர்மப் பிரபு; ஏழைகளுக்கு நிரம்பக் கூலி கொடுக்கும் தயாள குணம் உடையவன். அவனே அறியாத கூலியாட்களோ, ஏழைகளோ அந்த ஊரிலே இல்லை. அவனுடை புகழ் பசிப்பிணியுடைய வர்களிடத்திலும் வறுமையால் வாடுபவர்களிடத்திலும் பர்வியிருந்தது. ‘. . . . -

பெரிய கப்பல் வியாபாரி அவன். படகு தள்ளு பவர்கள் அவனுடைய புகழைப் பாடிப் படகை ஒட்டு வார்கள். ஏலேலோ என்ற வாய்பாடு அவன் பெயராகிய ஏலேலன் என்பதிலிருந்து வந்ததென்று ஒரு செய்தி வழங்குகிறது. கப்பல் பாட்டு "ஏலேலோ' என்று ஆரம்பிக்கும். படகுக்காரன் பாட்டிலே இருப்பதுபோல ஏலேலோ, ஐலஸா என்று இரண்டு சொற்கள் எதிரெதிர் வழங்குவது உண்டு. சுண்ணும்பு குத்துகிற பெண்கள் ஏலேலமடி ஏலம்' என்பதை ஒவ்வோரடிக் கும் முடியாக வைத்துச் சில வகைப் பாடல்களைப் பாடுகி