பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடிய உள்ளம் 137

கணமும் இலக்கியமும் செய்திருக்கிரு.ர்கள். இன்ன பொருளை இன்ன இன்னபடி சொல் லிக்கொண்டு போகவேண்டும் என்ற வரையறையே தமிழர்கள் தங்கள் சொத்தென்று பாராட்டி உரிமை கொண்டாடுவதற்கு உரியது. அந்த வரையறை பொருட்போக்கைச் சிறைப் படுத்தி வெறும் வாய்பாடாக வைத்துவிடவில்லை. கலைத் தன்மை நிரம்பிய வரம்பு கட்டி அழகுபடுத்துகிறது.

ஒரு சிறிய உதாரணத்தைக் கவனிக்கலாம்: இந்தக் காதல் சித்திரம் அவ்வளவும் உலகத்தில் உண்மை யாகவே நிகழ்வதன்று என்று புலவர்கள் சொல்லு கிரு.ர்கள். இல்லது, இனி யது, நல்லது, புலவர்களால் நாட்டப்படுவது' என்று சொல்வார்கள், அமானுஷ்ய மானது, லட்சிய வாழ்க்கையாகக் கருதுவதற்கு உரியது. கலையம்சம் நிரம்பியது, கவிதைச் சுவைக்கு வளப்பம் தருவது என்ற கருத்தோடுதான் அப்படிச் சொல்லு கிருர்கள். ஒரு காதலனும் காதலியும் அன்பு பூண்டு இன்பம் நுகர்கிரு.ர்கள் என்ற செய்தி இந்த அகப் பொருளில் வருகின்றது. இந்த நாடகத்துக்கு நாயகளுக உலகத்திலுள்ள ஒருவனே வைக்கக் கூடாது. யாரையா வது பாட்டின ற் புகழவேண்டும் என்ருல் அவன் பேரை வேறு ஏதாவது ஒரு சம்பந்தம்பற்றிப் பாட்டிலே சொல்லலாமே ஒழிய, காதல் நடத்தும் நாயிகளுகச் சொல்வது அகப்பொருளுக்குப் புறம்பானது. இந்த வரையறை காதலை மானுஷ்யமாக்காமல் தெய்விகமாக்கி விடுகிறது. கவிதையின் சுவையைப் புற உலக நினைவோடு நுகராமல் காதலின் நுட்பத்தை உள்ளபடி எண்ணிக் கருத்தில் ஊறும் இன்பத்தை நுகரும் வாய்ப்பை உண்டாக்குகிறது. * : * . . . . . . . . .”... . . . .

இந்தமாதிரி புலவர்களால் பழங்காலந்தொடங்கிப் போற்றிப் பாதுகாக்கப் பெற்று வந்த காதற் கவிதை படரும் துறைகள் பல. காதலனும் காதலியும் பிறர் அறியாதபடி தம்முள்ளே கலந்து இன்புறுதலும்,