பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நாடோடி இலக்கியம்

இடையிடையே தடை நிகழ்தலும், அது நீங்கவேண்டு. மென்று விரும்பிக் காதலி துயருறுதலும் இவைபோன்ற வேறு நிகழ்ச்சிகளும் அடங்கிய பகுதிதான் மிகவும் முக்கியமானது. எல்லோரும் அறிய மணந்துகொண்டு கணவன் மனைவியாக வாழும் வாழ்க்கையை மற்ருெரு பகுதி சொல்லும். முற்பகுதிக்குக் களவென்றும், பிற் பகுதிக்குக் கற்பென்றும் பெயர் வைக் கிரு.ர்கள்.

சுளவென்னும் பகுதி மிகவும் சுவை பொருந்திய

சாட்சிகளை உடையது. காதலன் காதலியைத் தேடிக் கொண்டு வருவதும், கட்டுக்காவலுக்குள் அடங்கி நிற்கும் காதலி அவனைக் குறித்த இடத்தில் குறித்த

காலத்தில் சந்திக்க முடியாமல் அவதியுறுவதும், இருவர் உள்ளத்தி லும் எழும் உணர்ச்சிகளும் கவிதையின் சுவையை மிகுவித்துச் சுவைமயமாக்குகின்றன.

鷲 晏 | . *

தன் காதலன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப் பிட்ட இடத்தில் வந்து நிற்கிருனென்பதைக் காதலி உணர்த்தும் அவனைப் போய்ச் சந்திக்க முடியவில்லை. என்ருல் அவள் மனம் என்ன பாடுபடும்! வேலை செய்ய ஒடுமா? தன் காதலன் தன்னைக் காண மல் ஏமாந்து போவானே என்ற வருத்தம், அவனைச் சந்திக்க முடிய வில்லேயே என்ற குறை, அவன் அங்கே நிற்பதை யாரேனும் கண்டுபிடித்துவிட்டால் என்செய்வது என்ற அச்சம் - எல்லாம் சேர்ந்து அவள் உள்ளத்தில் போராடு

நல்ல வேளையாக அவளோடு உயிருக்கு உயிராகப் பழகும் தோழி ஒருத்தி இருக்கிருள். அவள் தான் அந்த இரண்டு காதலர்களுடைய தெய்வக் காதலும் படர்ந்து ல ளர உதவியாக இருப்பவள். காதலி தன்னுடைய உள்ளத்தில் பொங்கி எழும் உணர்ச்சிகளை அவளிடம் சொல்லுகிருள். உள்ளத் துயரை வெளியிடுவதில்