பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மலரும் உள்ளமும்

காதல் நிரம்பிய உள்ளத்திலே, தான் செய்யும் எல்லாக் காரியங்களும் தன் காதலைப் பெற்றவர்களுக்கு உபகாரமாக இருக்க வேண்டுமென்ற எண்ண மே எழுகிறது. காதலன் தன் காதலியின் நன்மையையும் அவள் உன்னம் கணித்து இன்புற வேண்டும் என் பதையுமே கருதி முயற்சிகளே மேற்கொள்கிருன்அவளோ தான் செய்யும் காரியங்கள் எல்லாவற்றிற்கும் தன் காதலனது நன்மையை இலக்காகக் கொண்டிருக் கிருள். அவள் தன்னே அழகு செய்து கொள்வதுகூடத் தனக்காக அல்ல; பிறர் கண்டு பாராட்டவேண்டும் என்பதற்காகவும் அல்ல: தன் இயற்கை அழகெல்லாம் யாருக்குரியதோ அந்த உயிர்க் காதவன் கண்டு களித்து இன்புறவேண்டும் என்பதற்காகவே அவள் தன்னை அலங்கரித்துக்கொள்கிருள் ஆடை உடுத்துக் கொள்கிருள்: அணியும் அணிகிருள். எல்லாம் அவன் திருப்தியை நினைந்துதான். -

மாலைக் காலத்தில்தான் மனிதன் ஒய்வு பெறு கிருன். செய்கின்ற தொழிலில் ஈடுபட்டுப் பகல் முழுதும் உழைத்து விட்டு 'அப்பாடி!' என்று வீட்டுக்குச் செல் கிமுன், அங்கே வீட்டுத் தெய்வமாகிய மனைவி அலங் காரம் செய்துகொண்டு இன் முகமும் புன்னகையும் பூத்து அவனை வரவேற்கிருள். அப்பொழுது அவனுக்கு எத்தனை மகிழ்ச்சி உண்டாகிறது! உழைப்பினுல் ஏற்பட்ட சிரமம் அவ்வளவும் மறந்து போகிறது. எல்லாம் அந்தப் புன்னகையின் மோகனத் தன்மையில்ை

அவளும் அவனது வருகையினலே அடையும் இன்பம் சொல்லத் தரமா? காலேயில் உணவு உண்டு வேலைக்குப்