பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரும் உள்ளமும் 149

மாலை வந்தது. தன்னை எ ன் று ம் இல்லாதபடி அலங்கரித்துக் கொண்டாள். மல்லிகைப் பூ வு ம், ரோஜாப் பூவும் நிறைய வாங்கித் தொடுத்து வைத்தாள். இன்று அவன் கையாலேயே அந்த மலரைச் சூட்டிக் கொள்ளவேண்டும் என்ற ஆவல் அவள் உள்ளத்தே தீவிரமாக உண்டாயிற்று.

மாலை வந்தது. மலர் வந்தது. தென்றல் வந்தது. உலகம் முழுவதும் தண்ணென்ற உணர்ச்சி பரவியது. அவளும் தன் ஆருயிர்க் காதலனை எதிர்பார்த்து வாச லுக்கும் உள்ளுக்குமாகப் போய்ப் போய் வருகிருள். வானத்தைப் பார்க்கிருள். செக்கர் வானம் மறைந்து வெண்ணிலவு வெள்ளம் பெருகத் தொடங்கிவிட்டது. வானுலகம் முழுவதும் ஒரேயடியாக மல்லிகை மலர் பூத்ததுபோல உடுக்கள் குபிரென்று தோன்றிப் பளிச் சிடுகின்றன. அவள் உள்ளே வைத்திருக்கும் மல்லிகை மலர் அவள் கருங்குழலிலே புகுந்து பளிச்சிட இன்னும் நேரம் வரவில்லை. - z

என்ன இது! நேரம் ஆகிக்கொண் டிருக்கிறது: காதலன் வரவில்லையே! இருட்டிவிட்டது. அவள் உள்ளத்திலும் இருள் புகுந்தது. அவள் வதனம் வாடத் தொடங்கியது. உள்ளே சென்று படுக்கையில் தொப் பென்று விழுகிருள். உணவு கொள்ளவில்லை. எதிரே செப்பில் மல்லிகை அவளைக் கண்டு சிரிக்கிறது. ரோஜாப்பூ தன்னைப் பயன்படுத்திக்கொள்ளவில்லையே என்று சிவக்கிறது. -

அவளுக்குத் தாக்கம் வருமா? மனம் வாடி உடல் சோர்ந்து கண்ணிர் வார அவள் படுத்திருக்கிருள். மல்லிகையும் ரோஜாவும் மெல்ல மெல்ல வாடுகின்றன. அவள் அவற்றிலே கண்ணைச் செலுத்துகிருள்; உள்ளங் குமுறி வருகிறது, பாட்டு: