பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 518 டாடி இலக்கியம்

கிரு.ர். அந்த மாதிரியான பாடல்களைத் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் சேர்த்திருக்கிரு.ர். அம்மானை வரி, கந்துக வரி என்ற பெயரோடு அவருடைய காவியத் திலே உள்ள பாடல்களைப் படிக்கும்போது முன்னே சொன்ன இயற்கையோடு இணைந்த பாட்டுக்களைக் கேட்டு மயங்கினவர் இளங்கேள்வடிகள் என்பதை உணரல்ாம். திருவாசகத்தில் தோள் நோக்கம், சாழல், திருவுந்தி என்ற பெயர்களோடு வரும் பாட்டுக்களெல்லாம் இந்த இயற்கைப் பாட்டுக்களின் போலிகளே.

அந்தப் பாட்டுக்களின் விருவம், உலகில் பாமர மக்களும் குழந்தைப் பெண்களும் பாடும் பாடல்களி லிருந்து திருடிக்கொண்டது. கருத்து மாணிக்க வாசகருடையது. அவற்றின் உருவத்திலும் ஒசையிலும் நாடோடி உலகத்தைக் காண்கிருேம்; கருத்திலே மாணிக்கவாசகரை உணருகிருேம். -

இளங்கோவடிகள் முதல் பாரதியார் வரையில்

கேட்டு அதுபவித்த அந்த இயற்கைப் பாட்டுக்களை நாமும் கேட்கப் பழக வேண்டாமா?