பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*騒4 காடோடி இலக்கியம்

ஆண் நாய்க்கு அவமானம் தாங்க முடியவில்லை. தான் பட்ட அடியைப்பற்றிப் பேசுவதற்கே அதற்கு வெறுப்பாக இருக்கிறது. ஆனாலும் காயம் பலமாகத் தான் பட்டிருக்கிறது. காய்ச்சி ஒற்றிஞல் வலிக்கு இத மாக இருக்கும். அதைச் செய்யாமல் பெண் நாய் ஆத்திரத்தையல்லவா கிளப்புகிறது? இது மட்டுமா? ஏதோ அடிபட்டு விட்டது. மூன்ரும் பேருக்குத் தெரி யாமல் ஆண் நாய் ஓடி வந்திருக்கிறது. பெண் நாய், 'யார் அடித்தார்? எதற்காக அடித்தார்? ஏன் போளுய்?' என்றெல்லாம் கேள்வி கேட்டுக்கொண் டிருந்தால் பக்கத்தில் வேறு யார் காதிலாவது விழுந்து விடுமே! 'பகலில் பக்கம் பார்த்துப் பேசு, ராத்திரி அதுவும் பேசாதே" என்று பழமொழி சொல்லுகிறதே! பெண் நாயின் குறுக்கு விசாரணை, தான் பட்ட அவமானத்தை விளம்பரப்படுத்திவிடுமென்று பயப்படு கிறது ஆண் நாய். 'அந்த விசாரணை யெல்லாம் பின்னே வைத்துக் கொள்ளலாம்; இப்போது உடனே காய்ச்சி ஒற்று' என்று மெல்லச் சொல்லி வேண்டு சிறு து: - , - *

அடி. மெள்ளச் சொல்லடி

பின்னே சொல்லடி காய்ச்சி ஒற்றடி கன்னத்திலே.

பெண்நாய் தன் கணவனது சாமர்த்தியத்தை நினைத்துப் பார்க்கிறது. மிகவும் ஜாக்கிரதையாக ஒதுங்கிப் பதுங்கித் திருடிவரும் அதன் இயல்பு பெண் தாய்க்கு நன்ருகத் தெரியும். எச்சில் இலை விழுந்தாற் கூட எட்டி எட்டிப் பார்த்துத் தனக்கு அபாயம் இல்லை என்று தெரிந்தால்தான் ஆண் நாய் அங்கே போகும். கல் எடுத்து யாராவது போடுவது தெரிந்தால் காதவழி தூரம் காற்ருய்ப் பறந்துவிடும்! இந்த ஆற்றல்களே யெல்லாம் எடுத்துச் சொல்லிப் பெண் நாய் இரங்கு கிறது: