பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - நாடோடி இலக்கியம்

தலைமை வகித்தோ,வேறு ஏதோ முக்கியமான காரியத்தை மேற்கொண்டோ என்றும் பிரியாத தன் அருமைக் காதலியைப் பிரிந்துபோயிருக்கிருன்.

- கணமேனும் அவனைப் பிரித்தறியாத காதலி இந்தப் பிரிவி ஒல் அள்வற்ற துயரத்துக்கு உள்ளாகிருள். அவன் வத்துவிடுவான் என்ற நம்பிக்கையால் உயிர் வாழ்கிருள்.

ஒரு நாள் கழிவது ஒரு யுகமாக இருக்கிறது. உணவு செல்லவில்லை. அவளுக்கு விருப்பமான பொருள்கள்

எல்லாம். இப்போது வெறுப்பைத் தருகின்றன. 1 ல் Eத்து ஆ ை. புனைந்து அணிகளைப் பூட்டி

எழிலுருவாகத் திகழ்ந்த அவள் இப்போது அவற்றை ஏறெடுத்தும் பr:ர்க்க வில்லை. . . . . -

இப்படி எத்தனே நாள் இருப்பது? அவளுடைய உயிர்த்தோழி, நாயகன் தன் கடமையைச் செய்யப் போயிருக்கிருனென்பதையும், விரைவில் வத்து விடுவான் என்பதையும் தக் காரணங்களைக் கூறி வற்புறுத்து கிருள். அதெல்லாம் நாயகியின் காதில் விழுகிறதா, என்ன? - . . . . .

அத்தக் கிழவி இருக்கிருளே. அவள்தான் நாயகியின் செவிலித் தாய்; தலைவியை இளம்பருவ முதல் தாலாட்டிச் சீராட்டி வளர்த் தவள். தன்னுட்ைய கண்மணியைப் போன்ற தலைவி வாடிய பசுங்கொடி போல்த் துவண்டு கிடப்பதைப் பார்த்து அவளுடைய மனம் 11 துகுகிறது, அவர் வந்து விடுவார்' என்று. சொல்வதல்ை அவ்விள நங்கைக் குத் துக்கம் அதிகமா கிறதே ஒழியக் குறைவதாகக் காணவில்லை. இவளுக்கு அவரைப்பற்றிய நினைப்பை மூட்டுவதே பிசகு போலும் என்று. அதுபவத்தில் தேர்ந்த அவள் கண்டு பிடிக்கிருள் இவள் மனத்தை அந்த எண்ணத்திலிருந்து மீட்க என்ன வழி: யோசிக்கிருள் கிழவிப் பாட்டி,

பாட்டி, கதை சொல்வதிலும் குழந்தைகள் மனத்தையும் கவரும் பாட்டுக்களைச் சொல்வதிலும்