பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றக்காரன் காதல் 1 5

சுப்பையன் விடவில்லை. வேலையனுடைய கவனத்தை. இழுக்க அவனுக்குத் தெரியும். தான் காணும் காட்சி அப்படிச் சுலபமாகப் புறக்கணிக்கக் கூடியது அன்று என்பதை அவன் உணர்கிருன்.

வேலி ஒரம் போகுது பார்' என்று மேலே அந்தக் காட்சியின் நிலைக்களத்தைச் சித்திரிக்கிருன். -

வேலையனுடைய கவனம் இப்போது திரும்புகிறது. வேலமரப் பாதையும், அந்தப் பாதையின் இரு மருங்கும் உள்ள வேலிகளும் அவ்னுக்குத் தெரிந்தவைகளே. சுப்பையன் கண்ணுக்குப் படும் உருவம் மாடா? மனிதன? மாடானலும் சரி, மனிதனைலும் சரி, பாதையின் நடுவிலே தானே வரவேண்டும்? வேலி ஒரமாக வர நியாயம் இல்லையே! இப்போது வேலையனுக்கு விளங்குகிறது. பாதையின் ஒரத்திலே மெல்ல மெல்ல நடந்து வருவது நிச்சயமாக ஒரு பெண் உருவந்தான். இந்த எண்ணத்தை உறுதிப் படுத்திக் கொள்ள விரும்புகிருன்.

"வேட்டித்துணி போட்டிருக்கோ சுப்பையா?" என்று கேட்கிருன். மேல் இருப்பவன் ஆம்' என்று சொல் வதை அவன் விரும்பவில்லை. வேலையன் எதை எதிர் பார்த்தானே அதே பதில்தான் வருகிறது.

"சித்தாடை கட்டிருக்கு - வேலையா. சரி: இப்போது, வருகிறவள் ஒரு பெண் அதிலும் சிற்ருடை கட்டிய இளம் பெண் என்பதை வேலையன் உணர்ந்து கொண் டான். அவன் உள்ளத்திலே நிரு மித்துக் கொண்ட வேலமரப் பாதையிலே, வேலி , ஒரத்திலே ஒரு பெண்ணுருவத்தை எழுதிக்கொள்ள முயல்கிருன். அந்தப் பெண் யார்? எப்படி இருக்கிருள்? - இந்தச் சந்தேகங்கள் தொடர்ச்சியாக எழுகின்றன.

"சின்னக்குட்டி போலிருக்கு-சுப்பையா' என்று சொல் கிருன். சிற்ருடை கட்டியவள் சின்னக் குட்டி யாகத்