பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றக்காரன் காதல் 1 7

'காத்தெனவே பறந்து வரா-வேலையா. இவ்வளவு அவசரம் எதற்கு? ஒருகால் தனக்குக் கஞ்சி கொண்டு வரலாமென்று நினைக்கிருன் வேலையன். அவனுடைய அத்தை மகள் ரத்தினந்தான் அவள் என்று நிச்சயம் செய்து கொண்டான்.

"கஞ்சி கொண்டு வாராளோடா - சுப்பையா' என்று கேட்கிருன். அவள் கையில் கஞ்சி இல்லை. கதிர் அறுக்கும் அரிவாள் இருக்கிறது.

"கதிரரிவாள் இருக்குதடா என்று கப் பையன் சொல்கிருன். வேலையனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"கதிரறுக்கும் காலமல்ல வே என்கிருன். சுப்பையன் ஒரு சமாதானம் சொல்கிறன்:

'ஆட்டுத் தழை அறுப்பாள்டா!' Tir5 7T.

உண்மையில், வருகிறவள் தன்னுடை ய காதலனைப் பார்க்கத்தான் வருகிருள். அவன் கண்ணிலே பட ஏதோ ஒரு காரணத்தை மேற்கொண்டு வருகிருள். வேலை யனுக்குப் படபடக்கிறது. . 4.

'அண்டையிலே வந்துட்டாளோ?' என்று வேகத்தோடு கேட்கிருன், • . . "அன்னம் போலே முன்னே வாரா" என்று சுப்பையன் சொன்னதும் அவனுக்கு வேலை ஒடவில்லை. வேலையிலே கண்ணிருக்கு என்று வீரம் பேசினவன் மயங்கி நிற்கிருன். அவன் மனத்தில் இருந்த காதல் வெளிப்பட்டுப் ப்ொங்கு கிறது. வருகிறவள் தன் காதலிதான் என்பதில் இனிச் சந்தேகமே இல்லை. அவன் பல்லே இளித்துக் கொண்டே, "அவள் என்-அத்தை மகள் ரத்தினம்டா என்று இரகசி. யத்தை வெளியிடுகிருன். அந்த இரகசியத்தை நன்ருகத் தானும் அறிந்து கொண்டதை, "அவள் உரிமையுள்ள புருசனும் 'ே என்ற வார்த்தைகளால் தெரிவித்துச்

சுப்பையனும் மகிழ்கிருன். .

நா. 2