பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 . நாடோடி இலக்கிiம்

ஆலயங்கள் தோறும்

அணிமதிற் கட்டிவைப்பார்; கோயில்கள் தோறும்

கோபுரங்கள் கட்டிவைப்பார்; காணுத தோயில்கட்குக் . . .

காணிக்கை அனுப்பிவைப்பார்; செங்கல்லைக் கண்டவுடன்

தெய்வமென்று கைதொழுவார்; கருங்கல்லைக் கண்டவுடன்

கர்த்தனென்று கைதொழுவார்.

ஏற்றக்காரன் பாட்டுக்கு வருவோம். ஒரு பெண் தன்னுடைய உள்ளத்திலே, மறுகிப் பொங்கிய துக்கத்தைத் தாங்க முடியாமல் விம்மி விம்மி - அழுகிருள்: மான் அழுதாற்போல் அழுகிருள். அந்த அழுகையிலே மென்மை இருந்தாலும் கேட்டவர்கள் உள்ளத்தை அறுத்து உருக்குகிறது. - &

"ஏன் அம்மா அழுகிருய்? உன்னை யாராவது - அடித்தார்களா?”

அவள் பின்னும் விம்மி விம்மி அழுகிருள். " உன்னை உன் மாமன் அடித்தானே?" - - அவள் அழுதுகொண்டே பதில் செர்ல்கிருள். அவளே ஒரு மனிதரும் தீண்டவில்லையாம். புருஷன் அடிக்கவில்லை: கொழுந்தனும் அடிக்கவில்லை. பின். எதற்காக அழுகிருள்? - - - - - - -

"ஐயோ! நான் படுபாவி. எங்கள் வீட்டில் ஒரு குறையும் இல்லை. அதோ அந்த வீட்டில் வட்டில் நிறையச் சோறு வைத்திருக்கிருள். அந்த மகராசி.