பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§6 நாடோடி இலக்கியம்

இப்படி வீராயி சொன்னலும் உள்ளத்தின் அடித். தட்டிலே, 'சாமி, கடவுளே, நாலு நாளில் அவர் செளக்கியம்ாக வந்து சேர வேண்டும்’ என்று வேண்டிக், கொண்டாள். -

வேண்டுகோள் பலித்தது. அந்த வெட்கங்கெட்ட ஆண் வடிவம் மீண்டும் வீடு வந்து சேர்ந்தது. அவன் தூரத்தில் வரும்போதே தெரிந்து கொண்ட தோழி ஒடி வந்தாள். அவனே வரவேற்று உபசாரம் செய்யும்படி வீராயிக்குச் சொல்லுகிருள்.

- ஏ குட்டி வீராயி . . . .

உன் புருசன் வாராண்டி! வீட்டை மெழுகடி! -

வெள்ளிப்பாயைப் போடடி! கிள்ளிமுள்ளிச் சந்தனத்தைக்

கிட்டஎடுத்து வையடி! மதுரைக் கோட்டை வெற்றிலே

மடிச்சு மடிச்சு வையடி! ஒழுக ஒழுகச் சந்தனத்தை

மார் நிறையப் பூசடி!

தோழிக்கு உணர்ச்சி பொங்கி வருகிறது. வீராயியோ அவனைச் சிறிதும் எதிர்பாராதவள்போல் உணர்ச்சி யலைகளை அடக்கிக்கொண்டு நிற்கிருள். அவன் வீட்டுக்குள் அடி வைத்துவிட்டான். -

இப்போது என்ன செய்வது? வெள்ளிப் பாயைப் போடுவதா? வெற்றிலையை மடித்து வைப்பதா? சந்த னத்தைப் பூசுவதா? அப்படிச் செய்தால் அந்த ஆண் பிள்ளை மறுபடியும் பெண் பிள்ளையாகிவிட்டால் என்ன செய்வது? அவனுக்கு உபசாரம் செய்வதற்கு வீட்டிலே

கொட்டியா கிடக்கிறது? சந்தனத்தையும் வெற்றிலே