பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முள்ளு முன 77

கண்ணில்லாக் கணக்குப் பிள்ளைக்கு விட்ட ஊரு மூணு

ரெண்டு ஊரு பாழு- ஒண்ணில் குடியே இல்லை. ஊரு

குடியில்லா ஊரிலே குமரிப் பெண்கள் மூணுபேரு

ரெண்டுபேர் மொட்டை - ஒத்திக்கு மயிரே இல்லை.

மயிரில்லாப் பெண்ணுக்கு வந்தமாப்பிள்ளை மூணுபேர்

ரெண்டு பேர் பொக்கை - ஒத்தனுக்குப் பல்லே இல்லை.

ஒவ்வொன்றிலும் மூன்று மூன்று பொருள்கள்: மூன்றும் உபயோகம் இல்லை. ஆல்ை, அதை அப்படிச் சொல்லவில்லை. இரண்டை ஒரு வித்மாகவும் ஒன்றை ஒருவிதமாகவும் சொல்கிறது பாட்டு. குளம் பாழு என்பதும் குளத்தில் தண்ணியே இல்லையென்பதும் ஒன்று தான். ஆலுைம் முள்ளு முனையிலே முனு. குளம் வெட்டி வச்சேன் என்று தன்னுடைய சிரமத்தை அவன் சொல்ல ஆரம்பிக்கும்போது அப்படியா! எப்படி முடிந்தது? என்று ஆச்சரியமும் ஆவலும் தூண்டக் கேட்கிருேம். இத்தகைய பாட்டுக்களைப் படித்துப் பார்ப்பதைவிடப் பாடிக் கேட்பதில்தான் தவை இருக், கிறது. -

முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி :ச்சேன் என்ற அடியை நிறுத்திப் பாடும்போது பாடுபவனுடைய வார்த்தைகள் எவ்வளவுக்கு எவ்வளவு நிதானமாக வருகின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு கேட்ப வனுக்குச் சுவை உண்டாகிறது.

ரெண்டு குளம் பாழு என்று சொல்லும்போது, 'அடடா" என்று நாம் இரங்குகிருேம். 'ஆலுைம் இன்னும் ஒரு குளம் இருக்

கிறதே! அது எப்படி இருக்கிறது? அதாவது நன்ருக இருக்கட்டும்' என்று நாம் விரும்புகிருேம்.