பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அரிசிக்காரன்

இலக்கியங்களுக்கும் நாடோடிப் பாடல்களுக்கும் ஒரு பெரிய வேற்றுமை உண்டு. முக்கியமாகப் பாரத நாட்டு இலக்கியங்கள் பெரும்பாலும் லட்சிய வாழ்க் கையையே குறிக்கோளாக உடையன, இலக்கண நூல்களில், நூல்களால் உண்டாகும் பிரயோசனம் என்ன என்று தெரிவிக்கும் பகுதியில் அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன்' என்ற கருத்தைக் காணலாம். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற இந்த நான்கு பொருள்கள் யுமே நூல்கள் சொல்ல வேண்டும். அதர்மத்தின் அழிவையும், தர்மத்தின் வெற்றியையும் காவியங்கள் விளக்கவேண்டும். இல்லா விட்டால் அந்த இலக்கியம் எழுவுதல்ை பயன் இல்லை என்பது நம் நாட்டுப் பழங்கொள்கை. -

லட்சிய வாழ்க்கை, உண்மையான வாழ்க்கை யினின்று நெடுந்துாரத்தில் இருக்கின்றது. கிருத யுகத் தைப்பற்றிப் புத்தகங்களிலேதான் பார்க்கிருேம்; கலியுகத்தைத்தான் உலகத்தில் காண்கிருேம். கிருத யுகத்தைப் பற்றிக் கவிதையும் காவியமும் இலக்கணமும் புலவர்கள் எழுதிக் குவித்திருக்கிருர்கள். ஆனலும் உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் கலியுகத்தின் மூச்ச்ை நுகர்கிறன், கலியுகத்தின் உறுப்பாக இருக்கிருன்.

குணங்களுக்கெல்லாம் இருப்பிடமாய்க் குற்றமே இல்லாதவனுகக் காவிய நாயகனைப் படைக்க வேண்டும்: என்பது அலங்கார நூலின் வரையறை கேட்பதற்கு நன்ருகத்தான் இருக்கிறது. இருந்ததென்றே சொல்ல. வேண்டும். ஏனென்ருல் அந்த லட்சிய நாயகர்களைப்