பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

て(5 'மாட்டேன்'

கிழவனுக்கு இளம்பெண் வாழ்க் கைப்பட்டு விட்டாள்; பணம் கொடுத்துப் பொம்மையை விலைக்கு வாங்குவதுபோல் அவன் வாங்கிக்கொண்டான். பாவம்! அந்தக் குழந்தைக்கு வாழ்க்கை இன்னதென்றே தெரியாது. மான் குட்டிபோலத் துள்ளி விளையாடும் வாழ்க்கை தான் அவளுக்குத் தெரியும். அவன் கட்டிய மெல்லிய தாலிக் கயிறு அவள் வாழ்க்கையின் சுதந் -தரத்தையும் உல்லாசத்தையும் கட்டுப்படுத்தி விட்ட தென்பதை அப்போது அவள் உணரவில்லை. ஆளுல் பருவம் வந்தால் உணராமல் இருக்க முடியுமா?

இப்போது அவள் குழந்தையல்ல; புருஷன் வீட்டுக்கு வந்து குடித்தனம் செய்யத் தொடங்கியிருக்கிருள். புருஷனுடைய லட்சணத்தையும் வாழ்க்கையின் அழகை யும் பார்த்தால் அவளுக்கு அழுகை வருகிறது. கிழவன் அவளைச் சாதுவென்று நினைத்தான். அவளைச் சாதுவாகச் செய்வதற்கு அவனுக்குத் தைரியம் இல்லை. அவளோ வாழ்க்கை இன்னதென்று உணர்ந்து கொண்டாள். கிழவனுக்கு அடங்கி நடப்பதென்முல் அவளுக்குக் கசப்பாக இ ரு க் கி ற து, 'இந்தக் கிழவனேடு வாழ்வதைவிடக் கல்லைக் கட்டிக்கொண்டு. கிணற்றிலே விழுந்துவிடலாம்' என்று அவள் எண்ணுகிருள். இளமை யையும் பெண்மையையும் அந்தக் கிழட்டுக் கோட்டா லுக்குப் பலியிடவா அவள் பிறந்தாள்? -

எதிர்த்துப் பேச ஆரம்பித்தாள். கிழவன் முதலில் மிரட்டின்ை; அவள் பின்னும் அதிகமாக முரணிள்ை. அவளை அடக்க முடியாதென்று எண்ணி நயந்து போக