பக்கம்:நாட்டியக்காரி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 இந்த பதிலுக்குப் ப்திலாக ஒரு கெடுமுச்சு எழுந்து மறைந்தது. மீண்டும் சிந்தனே. கமலி மெதுவாக எழுந்து அவனுக்குப் பின்புறம், காற் காலியோடு சாய்ந்து, அவன் தோளுக்கு மேலாக பார்வையை விட்டெறிந்தாள். மேஜைமீது பரப்பிக் கிடந்த காகிதங்கள், அடித்து அடித்து ஆக்கப் பட்ட சில வரிகளால் வானத்து நிலவையும் காதலே யும், மனித உள்ளத்தையும் அளக்க முயன்று முடி யாமல் திணறிக் கிடந்தன. அவற்றைப் படிப்பதற்குக் குனிபவள் போல தலையைத் தாழ்த்தினுள் தணிவாக. அவன் முகத்திலே கூந்தல் வருட, மல்விகை மணம் கம்மென்று காசியில் தாக்கவே அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. "சட், இதென்ன எழவு: எழுதும்பொழுது சனியன் மாதிரி' என்று எரிந்து விழுங்தான் வாணிதாசன். அவள் கு ைழ வ க 'அம்மாடி' எனக் குறும்பு மொழியைக் காதரு கில் ஒலி பரப்பினுள். - 'இந்தா, சும்மா போக மாட்டே பின்னுலே கிற்காதே. இப்படி முன்னல் வந்து தொலே என்று கத்தினன், இல்லாத உருவங்களின் உணர்ச்சிகளே அளவிட முரண்டிய எழுத்தாளன். முன் வங்தாள் கமலி. துரண்டில் கோக்கை விழிக்கோணத்தில் கிறுத்தி, புன்னகை சிதறினுள். "எழுத்து, எழுத்து, எழுத்து ஓயாமல் இதே வேலே தாளு” என்று முணுமுணுத்தாள். 'உனக் கென்ன தெரியும் அதைப்பற்றி?’அவன் பேச்சில் கர்வம் தொனித்தது. 'இல்லை. உங்களுக்குத்தான் தெரியும்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/28&oldid=782747" இலிருந்து மீள்விக்கப்பட்டது