பக்கம்:நாட்டிய ராணி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


போகிறேன் " என்று கூறிக்கொண்டே குட்டியிடம் வந்தது.

அப்பொழுதுதான் நாட்டியராணிக்குத் தாயின் நினைவு வந்தது. "தாய் சொல்லைத் தட்டி நடந்த தால் என் உயிருக்கே ஆபத்து வந்துவிட்டதே. நான் இதுவரையிலும் தாய்சொல்லைத் தட்டியதே இல்லை. இன்று அதற்கு மாருக நடந்துகொண்ட தால் என் உயிர் போகப்போகிறது. தாயின் சொல்லை மீறி நடப்பது பெரிய பாவம் ” என்று அது ஏங்கலாயிற்று.

நரி கொஞ்சங் கொஞ்சமாக அருகில் வந்து கொண்டே இருந்தது. அதன் வாயில் நீர் ஊற ஆரம்பித்துவிட்டது.

“ அம்மா, நீ தெய்வமல்லவா? இனிமேல் உன் சொல்லைத் தட்டவே மாட்டேன். இப்பொழுது இந்த ஆபத்திலிருந்து தப்ப எனக்கு ஒரு தந்திரம் உதயமாகும்படி செய் ” என்று நாட்டியராணி மனத்திற்குள்ளேயே வேண்டிக்கொண்டது.

உடனே அதற்கு ஒரு சூழ்ச்சி உதயமாயிற்று. " நரி மாமா, நரி மாமா நீதான் என்னைத் தின்னப் போகிருய், இங்கு யாருமே இல்லை. ஆதலால் கொஞ்சம் பொறுத்துக்கூட என்னைக் கொன்று தின்னலாம். அப்படித் தின்பதற்கு முன்னுலே எனது நாட்டியத்தை நீ பார்க்கவேண்டாமா ? நான் நன்ருக ஆடுவேன். நாட்டியம் முடிந்த பிறகு நீ உன் விருப்பம்போலத் தின்னலாம்” என்றது.

குள்ளநரிக்கும் ஆட்டுக்குட்டியின் நாட்டியம் பார்க்க ஆசையுண்டாயிற்று. மேலும், மாலேநேரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/10&oldid=1064653" இலிருந்து மீள்விக்கப்பட்டது