பக்கம்:நாட்டிய ராணி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


அடுத்த நாள் நடுப்பகல் வேளையில் சிங்கம் வழக்கம்போல் மரத்தின் அடியில் படுத்து உறங்கத் தொடங்கியது. சிலந்தி மெதுவாகப் போய் சிங்கத்தின் மூக்கினுள் நுழைந்துகொண்டது. மூக்கிற்குள் என்னவோ குடைகிறதென்று சிங்கம் எழுந்து துள்ளியது. சிலந்திப் பூச்சியை மூக்கி லிருந்து வெளியில் கொண்டுவர வழிதெரியாமல் மிரண்டு காட்டிற்குள் ஒடத் தொடங்கியது.

சிலந்தி மூக்கிற்குள்' புருபுரு' என்று தனது எட்டுக்கால்களையும் அசைக்கும். சிங்கத்திற்குத் தும்மல் வருவதுபோல இருக்கும் ; ஆல்ை வராது. மறுபடியும் வருவது போல் இருக்கும். அதனுல் சிங்கம் மூக்கிற்குள்ளிருந்து ஏதோ வருவதாக எண்ணி, பயந்து துள்ளிக்குதித்து ஓடியது.

ஓரிடத்திலே முயல்கள் கூட்டமாகக் கூடி புல் மேய்ந்து கொண்டிருந்தன. அவை தமது ராஜா வாகிய சிங்கம் இப்படி ஓடிவருவதைப்பார்த்து, 'மகாராஜா, ஏன் இப்படி ஓடிவருகிறீர்கள்?’ என்று கேட்டன.

" ஐயோ, வருதே ” என்று சொல்லிவிட்டு சிங்கம் துள்ளிக் குதித்து மேலும் ஒடலாயிற்று. அதைக் கண்டு என்னவோ வருகிறது என்று பயந்துகொண்டு முயல்களெல்லாம் சிங்கத்தையும் முந்திக்கொண்டு ஒடத் தொடங்கின. முயல்கள் ஓடிவருவதை ஒரு மான்கூட்டம் பார்த்தது. "முயல்களே, ஏன் இப்படி ஒடி வருகிறீர்கள் ? ” என்று ஒரு மான் கேட்டது.

"என்னமோ வருகிறதாம். நம்ம ராஜாவே சொல்லுகிறார் ; அவரும் ஓடி வருகிறார் ” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/16&oldid=1064859" இலிருந்து மீள்விக்கப்பட்டது